அக்கரைப்பற்று பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளராக ஏ.எல்.எம்.சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக ஏ.எல்.எம்.சலீம் கடமையாற்றுகின்ற நிலையிலேயே இந்த பதில் பிரதேச செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக ஏ.எல்.எம்.சலீம் கடமையாற்றுகின்ற நிலையிலேயே இந்த பதில் பிரதேச செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (01.01.2014) புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை மாவட்ட செயலாளர் நீ டி அல்விஸினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.வை.சலீம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே ஏ.எல்.எம்.சலீம் அக்கரைப்பற்று பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment