• Latest News

    January 01, 2014

    காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல்: கொழும்பு மாநகர சபை சுகாதார பிரிவு நடவடிக்கை

    கொழும்பு ரொஸ்மிட் பிளேசிலுள்ள வியாபார நிலையமொன்றில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்தமையால் கொழும்பு மாநகர சபையினால் குறிப்பிட்ட வியாபார நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
    கொழும்பு ரொஸ்மீட் பிளேஸ் மற்றும் பழைய சோனகத் தெரு ஆகிய இடங்களில் நேற்று நண்பகல் கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பிரிவினர் மேற்கொண்ட வெவ்வேறு சுற்றி வளைப்புகளின் போது  நுகர்வுக்குப் பொருத்தமில்லாத 400 கிலோகிராம் சொக்லட் பவுடரும் 500 கிலோ கிராம் பேரீச்சம் பழங்களும் கைப்பற்றப் பட்டதாக  கொழும்பு மாநகர சபைக்குப் பொறுப்பான டாக்டர் காரியவசம் நேற்று தெரிவித்துள்ளார்.

    ரொஸ்மிட் பிளேசிலுள்ள இந்திய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சொக்லட் உணவு பொருட்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்தே நேற்று காலாவதியான பொருட்கள் நேற்று  கைப்பற்றப்பட்டுள்ளன. இவை சொக்லேட்டுக்கள் மற்றும் கேக், புடிங் போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. குறித்த நிலையம் கொழும்பு மாநகர சபை சுகாதார அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, பழைய சோனகத் தெருவில் பிரபல இறக்குமதியாளர்கள் காலாவதியான பேரீச்சம்பழங்களை கவர்ச்சிகரமாக பொதி செய்து சில்லறை கடைகளுக்கு விநியோகிக்க தயாராகயிருந்த நிலையிலேயே 500 கிலோகிராம் பேரீச்சம்பழங்களும் கைப்பற்றப்பட்டிருப் பதாகவும் அவர் கூறினார்.

    மனித பாவனைக்கு சிறிதும் பொருத்தமில்லாத மேற்படி உணவுப் பொருட்களை கையாண்ட மற்றும் விற்பனை செய்ய முயற்சித்த நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் டாக்டர் காரியவசம் தெரிவித்தார்.

     இங்கு காணப்பட்ட சொக்கலேட்டுகள் இந்தியா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் 10 மாத ங்களுக்கு முன்னதாக காலாவதியானவை என்று கொழும்பு மாநகர சபை பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் கூறினர்.

    ஆயினும், இந்த கடையானது நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டதென பொது சுகாதார பிரசோதகர் மேலும் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல்: கொழும்பு மாநகர சபை சுகாதார பிரிவு நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top