• Latest News

    January 27, 2014

    இலங்கையில் இரண்டாயிரம் தொழு நோயாளர்கள் உள்ளனர்: சுகாதார அமைச்சு

    இலங்கையில் வருடாந்தம் இரண்டாயிரம் தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகப் பெரிய எண்ணிக்கை என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் நிலாந்தி பெர்ணான்டோ தெரிவித்தார்.
    இலங்கை மக்களில் ஒரு லட்சம் பேருக்கு 10 தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
    உலக தொழு நோய் தினத்தை முன்னிட்டு பொலனறுவை வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
    தொழு நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் நாடுகள் வரிசையில் இலங்கை 16வது இடத்தில் உள்ளது.
    இலங்கையில் 2013 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 32 தொழு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 177 பேர் சிறுவர்கள்.
    இலங்கையில் 11 மாவட்டங்களில் அதிகளவான தொழு நோயாளர்கள் இருப்பதுடன் மேற்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அதிகளவானோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    தொழு நோய் என்பது முற்றாக குணப்படுத்தக் கூடிய நோயாகும். இதனால் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். 6 மாதம் அல்லது ஒரு வருடம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றால் நோயை முற்றாக குணப்படுத்தி கொள்ள முடியும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் இரண்டாயிரம் தொழு நோயாளர்கள் உள்ளனர்: சுகாதார அமைச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top