- பைஷல் இஸ்மாயில் -
மாணவர்களின் கல்வித் திறனையும் தேடல்களையும், வாசிப்புத் திறன்களையும், உலக அறிவினையும் பெற்றுக்கொள்ளும் சிறந்ததொரு அமைதியான ஒரே இடம் நூலகமாக இருக்கின்றது. இந்த நூலகத்தினை காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்குமாறு ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் நூலகருக்கு பணிப்புரை விடுத்தார்.
ஏறாவூர் பொது நூலகத்திற்கான திடீர் விஜயத்தினை இன்று காலை (24) மேற்கொண்டபோது அவர் இவ்வாறு பணிப்புரையினை விடுத்தார்.
மாணவர்களின் பரீட்சைக் காலம் நெருங்குவதைச் சுட்டிக்காட்டியும், மாணவர்களின் நன்மைகளை கருதியும் ஏறாவூர் பொது நூலகத்தினை 12.00 மணித்தியாலயங்களுக்கு திறந்து வைக்குமாறும் இதற்காக ஆண் ஊழியர்களை சுழற்சி முறை கடமை அடிப்படையில் பயன்படுத்துமாறும் நூலகரை மேலும் பணித்தார்.
அத்துடன் நூலகத்தின் குறைபாடுகளை நேரடியாக அவதானித்து அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுயளித்ததுடன் நூலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களையும் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.


0 comments:
Post a Comment