ஏ.ஜே.எம்.ஹனீபா;அம்பாறை மாவட்ட செயலகத்தில் 2014ம் வருடத்தினை வரவேற்று பல்வேறு நிகழ்வுகள் நேற்று (2014.01.01) மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் தலைமையில் நடைபெற்றன.
சகல மதங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான மதநிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த வைபவத்தில் அரச உத்தியோகத்தர்கள் 2014 தமது கடமைகளை ஏற்று மக்களுக்கு புதிய பரிமானத்துடனான சிறந்த அற்பணிப்புடனான சேவையினை வழங்கும் முகமான உறுதிப்பிரமான நிகழ்வு சிங்கள, தமிழ் மொழிகளில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.விமலநாதன், பிரதம கணக்காளர், ஐ.எம்.ஹூசைன், பிரதம பொறியியலாளர் எம்.றாசீக், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்,மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுறுத்தபியதாச உட்படமாவட்ட செயலகத்தின் சகல திணைக்களங்களினதும் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.









0 comments:
Post a Comment