• Latest News

    January 13, 2014

    குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    பெரிய நீலாவணை அக்பர் கிராம 'அல்-மாஹதுல் இஸ்லாமி குர்ஆன் மன கற்கைகள் நிலைய' மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றி இறுதிப் போட்டிக்குத் தெரிவானவர்களுக்கான போட்டியும், பரிசளிப்பும் நேற்று இரவு (12-01-2014) பெரிய நீலாவணை மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

    மருதமுனை தாறுல் ஹூதா பெண்கள் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்;ஷெக் எம்.எல்.முபாறக் மதனி அவர்களின் தலைமையில் இந்த போட்டி நிகழ்வு இடம்பெற்றது. அறுபது மாணவர்கள் பங்குபற்றிய இந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு பத்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

    இம்மாணவர்களில் 1ம் இடம் முஹம்மட் றாபி ஷாஹின் அஹமட் (95.5 புள்ளிகள்) 2ம் முஹம்மட் சிறாஜ் முஹம்மட் கிஷோர் (94.5) 3ம் இடம் முஹம்மட் உஸாமா அலா அஹ்மட்(90)  4ம் இடம் இஸ்ஹாக் அத்;லி அஹ்மட் (88.5) 5ம் இடம் மாலிக் அப்துல்  ரஹ்மான் (88) 6ம் இடம் முஹம்மது மஸின் யஹ்யா அம்மார் (87) 7ம் இடம் முஹம்மத் ஜாபிர் முஹம்மது பர்ஹத் (86.5) 8ம் இடம் முஹம்மட் நௌஷாத் நௌப்லி அஹ்மட்(86) 9ம் இடம் முஹம்மட் இல்முதீன் சுமாஸ் அஹ்மட் (83.5) 10ம் இடம் அஹ்மட் அஜ்மிர் அரீஜ் அஹ்மட் (83) ஆகியோர் இறுதிப்; போட்டியில் பரிசு பெறும் தகுதியைப்பெற்றனர்.

    இந்த நிகழ்வில் அஷ்;ஷெக் ஏ.எல்.ஏ.எச். முபாறக் (பாரி), அஷ்;ஷெக் எஸ்.எச்.முஜீப் (சலபி) அல்-ஹாபிஸ்களான எம்.ஏ.எம்.சினான்,ஏ.ஜி.அப்சல், அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.எம்.பாறுக், முன்னாள் தலைவர் வை.எல்.அன்சார், எஸ்.எல்.பகுறுதீன் ஆசிரியர், சம்மாந்துறை கல்வி வலைய பிரதிக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். ஊமர் மௌலானா மற்றும்  பள்ளிவாசல் நிருவாகிகள் பெற்றோர்கள் உள்ளீட்ட பெரும் அளவிலான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற பத்து மாணவர்களுக்கும், பங்குபற்றிய ஏனைய  மாணவர்களுக்கும்  அதிதிகளால் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top