ராமநாதபுரத்தில் 62 வயது கருப்பாயி பாட்டி தனக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமு கருப்பாயி தம்பதியினர் விவசாய தொழில் செய்து வந்தனர்.
திருமணமாகி 40 வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை, இதனால்
ஏராளமான அவமானங்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு
மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர்.
ஆனால், எந்த மருத்துவமனையும் பலன் கொடுக்கவில்லை, கடைசியாக சேலம்
மாவட்டத்தில் உள்ள சிசு மருத்துவமனையை அனுகியுள்ளனர், கருப்பாயிக்கு இருந்த
ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குழந்தை பிறப்பது சாத்தியமா? என்று
கேள்வியை எழுப்பின.
இருப்பினும், கருப்பாயி பாட்டியின் நம்பிக்கை, மருத்துவர்களின்
திறமையின் மூலம், கருப்பையை வலுவூட்டி கரு முட்டைதானம் பெற்து டெஸ்ட்
ட்யூப் பேபி முறையில் குழந்தையின் கருவை உருவாக்கிய பிறகு பத்து மாதம்
சுமந்து சிசரியன் மூலம் கருப்பாயி தற்போது அழகான பெண் குழந்தைக்கு தாயாகி
உள்ளார்.
மலடி என்ற பட்டத்தை இத்தனை ஆண்டுகளாக சுமந்து வந்த எனக்கு எனது ராஜாத்தி
புது வாழ்க்கை கொடுத்துவிட்டாள் என தனது குழந்தையை முத்தமிட்டு
சந்தோஷத்தில் திளைத்துள்ளார் கருப்பாயி அம்மா.



0 comments:
Post a Comment