ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார்.
இலங்கைக்கும் - ஐக்கிய அரபு ராஜ்ஜிய
நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும்
நோக்கில் ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
ஜனாதிபதி, அங்கு தங்கியிருக்கும் காலப் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்க அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தயாராகி வரும் நிலையில், ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தற்போது ஐக்கிய அரபு ராஜ்ஜிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

0 comments:
Post a Comment