மதுவை விட அபாயகரமான போதைப் பொருளாக கஞ்சாவை (மரிவானா) தான் கருதவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது பிள்ளைகள் அதனைப் புகைப்பதை ஊக்குவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கஞ்சாவை சட்டபூர்வமாக்குவது பல சமூகப் பிரச்சனைகளுக்கும்
சர்வரோக நிவாரணியாகும் என்று சிந்திப்பது தவறு என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.
கஞ்சா பாவனைக்காக வறிய மக்களே, பொருத்தமற்ற தண்டனைகளுக்கு உள்ளாவதாக ஒபாமா கூறுகிறார்.
த நியு யோர்க்கர் சஞ்சிகைக்காக அளித்த தொடர் நேர்காணல்களின் தொடர்ச்சியாகவே அதிபர் ஒபாமா இந்த விடயம் பற்றியும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment