• Latest News

    March 18, 2014

    1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்: அதில் 6 மலேசிய விமானம் மாயமான அதே பகுதியில்

    1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்: அதில் 6 மலேசிய விமானம் மாயமான அதே பகுதியில்
    கோலாலம்பூர்: கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


    17-1395034866-malaysian-airlines-mh-370-1-600கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை. முன்னதாக மலேசிய விமானம் மாயமான பகுதியில் 6 விமானங்கள் மாயமாகியுள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?

    83 விமானங்கள் 17-1395034866-malaysian-airlines-mh-370-1-600கடந்த 1948ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 83 விமானங்கள் அதுவும் பெரிய விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மாயமாகியுள்ளன. இது தவிர சிறிய ரக விமானங்கள் வேறு மாயமாகியுள்ளன.

    6 விமானங்கள்
    இதுவரை 83 விமானங்கள் மாயமாகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 விமாங்கள் தற்போது மலேசிய விமானம் மாயமான பகுதியில் மாயமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 17-1395034883-pan-malaysian-air-transport-600-jpg
    1993
    1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி பான் மலேசியா ஏர் டிரான்ஸ்போர்ட் விமானம் இந்தோனேசியாவின் மெடான்-பொலோனியா விமான நிலையத்தில் இருந்து கிளம்பி பன்டா அசேவில் உள்ள பிளாங் பின்டாங் விமான நிலையத்திற்கு செல்கையில் வடக்கு சுமத்ரா பகுதியில் மாயமானது. அந்த விமானத்தில் 3 சிப்பந்திகள் உள்பட 14 பேர் இருந்தனர். அந்த விமானம் மாயமானது மாயமானது தான். 17-1395035149-6seater-plane-600-jpg
    1983
    உபாலி ஏர் விமானம் என்482யூ 6 பேருடன் கடந்த 1983ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு கிளம்பியது. இலங்கை கோடீஸ்வரர் உபாலி விஜேவர்தனேவுக்கு சொந்தமான அந்த விமானம் மலாக்கா ஜலசந்தி பகுதியில் மாயமானது. விமானத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 17-1395035291-garuda-indonesia232-600-jpg
    1961
    கருடா இந்தோனேசியா ஏர்லைன்ஸ் விமானம் பிகே- ஜிடிஒய் 1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி இந்தோனேசியாவின் ஜுவான்டா விமான நிலையத்தில் இருந்து அதே நாட்டில் உள்ள சுல்தான் அஜி முகமது சுலைமான் விமான நிலையத்திற்கு சென்றது. 26 பேருடன் சென்ற விமானம் மாயமானது. அது கடலில் விழுந்துவிட்டதாக நம்பப்படுகிறது. vimanam-7
    1974
    வானிலை உளவு விமானமான ஸ்வான் 38 1974ம் ஆண்டு தென் சீன கடல் பகுதியில் மாயமானது. 4 நாட்கள் தேடியும் விமானம் கிடைக்கவே இல்லை. இதையடுத்து அதில் பயணித்த 6 பேரும் இறந்ததாக கருதப்பட்டது. 17-1395035728-charles-kingsford-smith-600-jpg
    1935
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சார்லஸ் கிங்ஸ்போர்டு ஸ்மித் என்பவர் விமானம் ஓட்டுவதில் புதிய சாதனை படைக்க 1935ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி தனது லாக்ஹீட் ஆல்டெய்ர் மோனோபிளேனில் கிளம்பினார். அவரது விமானம் அந்தமான் கடல் பகுதியில் தொடர்பை இழந்தது. அதன் பிறகு விமானத்தையும் சரி, அவரையும் சரி கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் கடலில் விழுந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
    17-1395036118-2-seater-plane22-600-jpg
    1932
    1932ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஆங்கிலேயர்களான ஜி.டபுள்யூ. சால்ட் மற்றும் எப்.பி. டெய்லர் ஆகியோர் ஒரு விமானத்தில் பர்மாவில் இருக்கும் மாலமைன் நகரில் இருந்து ரங்கூனுக்கு சென்றனர். அவர்களின் சிறிய ரக விமானமான ஜி-ஏஏகேஏ தென் பர்மாவில் இருக்கும் மார்தாபான் வளைகுடாவில் மாயமானது. 
    அந்த விமானம் கடலில் விழுந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. சம்பவம் நடந்த அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மார்தபான் வளைகுடா பகுதியில் விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று கிடைத்தது. ஆனால் அது அந்த 2 பேர் சென்ற விமானத்தின் பாகம் தான் என்பது உறுதி செய்யப்படவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்: அதில் 6 மலேசிய விமானம் மாயமான அதே பகுதியில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top