• Latest News

    March 10, 2014

    யுக்ரேனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:இலங்கை வெளிவிவகார அமைச்சு

    யுக்ரேனிலுள்ள, இலங்கை மாணவர்களின் நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
     
    யுக்ரேன் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் அங்கு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


    அதேவேளை ரஷ்ய படையினர் யுக்ரேனின் கிரீமியா என்ற சுயாட்சி பிராந்தியத்தில் நிலைக்கொண்டுள்ளதன் காரணமாக யுக்ரேனில் நிலவும் நிலைமைகள் தொடர்பில் சில நாடுகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    குறித்த சுயாட்சி பிராந்தியத்தில் இருந்து படையினரை திரும்ப அழைக்க வேண்டும் என அமெரிக்கா பல தடவைகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு அறிவித்திருந்தது.

    கிரீமியா பிராந்தியத்தில் இலங்கையை சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

    இந்த மாணவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யுக்ரேனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:இலங்கை வெளிவிவகார அமைச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top