சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கோரிக்கை வலுப்பெற்று இருக்கின்றது. முன்னாள் மேயர் இதில் ஈடுபடுவதனையிட்டு நாங்கள் ஆச்சரியமடையவில்லை. எதிர்பார்த்ததொன்றுதான். எமதூரைப்பொறுத்தவரையில் தனியான உள்ளுராட்சி மன்றம் மிகவும் அவசியமானது. இதில் எந்த வித மாற்றுக்கருத்துமில்லை. இது சம்பந்தமாக சிராஸ் மீராசாகிப் அவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் சில கருத்துப்பரிமாற்றங்கள்.
சிராஸ் அவர்களே நீங்கள் மேயராக பதவி வகித்தபேது எமக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வேண்டுமென்று ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இப்போ பதவி இல்லாத நிலையில் மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு உங்களின் சுயநல அரசியலுக்கு இதனை ஒரு துரும்பாக பயன்பபடுத்துகின்றீர்கள் . மேல் மாகாண சபை தேர்தல்
சூடுபிடித்திருக்கின்ற இவ்வேளையில் அவசரமாக இக்கோரிக்கையை முன்வைத்து உணர்ச்சியூட்டி மக்களை குழப்ப எத்தனிக்கின்ற மர்மம் என்ன ?சிராஸ் அவர்களே நீங்கள் மேயராக பதவி வகித்தபேது எமக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வேண்டுமென்று ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இப்போ பதவி இல்லாத நிலையில் மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு உங்களின் சுயநல அரசியலுக்கு இதனை ஒரு துரும்பாக பயன்பபடுத்துகின்றீர்கள் . மேல் மாகாண சபை தேர்தல்
உங்களுக்குரிய தனிப்பட்ட பதவியை தவிர சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம் சம்பந்தமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலைவர் ஹக்கீமுடன் நீங்கள் பேசியதில்லை. அமைச்சர் அதாஉல்லாவினால் தனிப்பட்ட முடிவெடுத்து இச்சபையை வழங்க முடியாது. தலைவர் ஹக்கீம் அரசுடன் இணைந்திருப்பதாலும், கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அரசுடன் இருப்பதாலும், எமதூர் மாகாண சபை உறுப்பினர் தலைமையில் கிழக்கு மாகாண சபையை அரசுக்கு முட்டுக்கொடுத்து வைத்திருப்பதாலும் இவர்களை எல்லாம் கலந்தாலோசிக்காமல் உள்ளுராட்சிமன்றம் வழங்க அமைச்சரவை முன்வருமா ?
உங்களுக்கு பதவி கோரிய போது தனது அமைச்சில் பதவி வழங்க தலைவர் ஹக்கீம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் பொலிசார் புடைசூழவும், பொலிசார் உங்கள் கார் கதவை திறந்துவிடும்படியான பதவி கேட்டிருந்தீர்கள். இக்கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களும், சொத்துக்களை இழந்தவர்களும், பல தியாகங்களை செய்த போராளிகளும், வழக்குகளை எதிர்கொண்டுள்ள தொண்டர்களும் இருக்கும் நிலையில் தலைவர் தனது கௌரவத்தை இழந்து உங்களுக்காக ஜனாதிபதியிடம் பதவி கோரி மண்டியிடும் அளவுக்கு இக்கட்சிக்கு நீங்கள் யார் ?
தனது எதிர்கால சமுதாயம் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக தனது இன்னுயிர்களை அர்ப்பனித்த தம் தலைவர்களையும் போராளிகளையும், பதவி தரவில்லை என்பதற்காக ஒற்றுமையாக இருக்கின்ற சமுதாயத்தை கூறுபோட நினைக்கின்ற உங்களையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டியிருக்கின்றது.
உங்கள் குடும்பம், தொழில், வீடு என அனைத்தும் கொழும்பில் இருக்கும் போது இங்கே நிரந்தரமாக ஒற்றுமையாக வாழ்கின்ற இவ்வூர் மக்களிடம் குழப்பத்தை உண்டுபண்ணி, இவ்வூரை பாதுகாக்க வந்தவர் போன்று நடிக்கின்றீர்களே ! 2011ம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் எங்கு சென்றீர்கள் ? உங்களுக்கு முன் இவ்வூரில் யாரும் அரசியல் செய்யவில்லையா ? நீங்கள் கோரிய பதவியை தலைவர் பெற்றுத்தந்திருந்தால் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் ஒன்றுக்கான அவசியம் பற்றி வாய் திறந்திருப்பீர்களா ?
உங்களுக்கு மேயர் பதவி வழங்கப்பட்ட போது தலைவர் ஹக்கீமை பாராட்டினீர்கள், சிறந்த தலைவர் என புகழ்பாடினீhகள், பொன்னாடை போர்த்தினீர்கள், இப்போ உங்களுக்கு எதிர்பார்த்த பதவியை தரவில்லை என்பதற்காக தலைவருக்கு நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் வசைபாடுகிறீர்கள். இங்கே தலைவர் சிறந்தவரா ? இல்லையா ? என்பதை பதவி தீர்மானிக்கிறது. இக்கட்சியினால் சாய்ந்தமருதுக்கு ஒன்றும் செய்யப்படவில்லையென கூறுவீர்களையானால் ஊரினதும் கட்சியினதும் வரலாறு உங்களுக்கு தெரியாது என்பதே அர்த்தமாகும்.
1999 ல் தனியான பிரதேச செயலகமும், 2000 ம் ஆண்டு 2004 ஆண்டிலும் இரு தடவைகள் தேசியப்பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் பதவியும், 2006 ல் பிரதி அமைச்சர் பதவியும் ஏனைய ஊர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் எமது ஊருக்கு வழங்கப்பட்டது. இதனை யார் வழங்கியது ?
உங்களுக்கு அரசியல் அடையாளம் வழங்கியது முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைவரும் , தேர்தலில் போட்டியிடுவதற்கு நீங்கள் ஒடிய ஒட்டத்தினை நினைவு கூர்ந்து பாருங்கள். தலைவரினால் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு அனுமதியில்லாமல் இருந்திருந்தால் மேயர் என்ற பதவியும், பிரபல்யமும் உங்களுக்கு கிடைத்திருக்குமா ? கட்சியினை பற்றி அறிவில்லாத உங்களுக்கு தேர்தலில் போட்டியிடவைத்தது கட்சியின் தவறு.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் இக்கட்சியை உருவாக்கும் போது அபிவிருத்தி செய்யமாட்டோம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும் போது முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமையைப் பெற உழைப்பதே முஸ்லிம் காங்கிரசின் கொள்கை என முழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் அன்று ஏராளமான அபிவிருத்திகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்களை நிராகரித்ததுடன் முஸ்லிம் தேசியத்தை உறுதிப்படுத்த முஸ்லிம் காங்கிரசுக்கு ஆணைவழங்கினர். பின்னாட்களில் அபிவிருத்தி செய்யாமல் இருக்கவுமில்லை சிறுபான்மையினமான எங்களது அரசியல் எவ்வாறு அமையவேண்டுமென்று தெரியாமல் மக்களால் நிராகரிக்கபட்ட அபிவிருத்தி என்ற சொல்லை தூக்கிக்கொண்டு அரசியல் செய்ய முற்படுகிறீர்கள். இது முஸ்லிம் காங்கிரசின் கொள்கைகளுக்கு முரணானது.
வல்வெட்டித்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று பிரபாகரன் கோரியிருந்தால் இன்று தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றிருக்குமா ? உலகில் எந்தவொரு நாடுகளும், தேசங்களும் போராட்டமின்றி , அழிவுகள் இன்றி உருவான வரலாறுகள் இல்லை. இழப்புகழ்தான் வெற்றியை தீர்மானிக்கின்றன.
அபிவிருத்தி என்பது அவசியமானதொன்று. அது உரிமையுள்ள அபிவிருத்தியாக இருக்கவேண்டும். காலில் விழுந்து கெஞ்சிப் பெறுகின்ற அபிவிருத்தி அற்ப சலுகையாகும். இதற்கு நீடித்த ஆயுள் இல்லை. அபிவிருத்திதான் எங்கள் இலக்கு என்றால் எமது சமுதாயத்துக்கென்றொரு கட்சி தேவையில்லை. கலைத்து விட்டு தேசிய பேரினவாதக்கட்சியில் சேர்ந்துகொண்டு அபிவிருத்தி என்ற போர்வையில் ஒதுக்கப்படுகின்ற பணத்தில் கொமிசன்களை கொள்ளையடித்துகொண்டு குறிப்பிட்ட வர்க்கத்தினர் உல்லாசம் அனுபவிக்கலாம்
சிறுபான்மையினமான எங்களின் தேசிய குரல் முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைவராக யாரும் வரலாம் மனிதர்கள் மரணிக்க கூடியவர்கள் எமது கட்சியை மரணிக்கவிடாமல் கட்டிக்காப்பது எமது கடமை.
தம்பி சிராஸ் அவர்களே ! அரசியலுக்கு வரமுன்பே அமைச்சர் ரிசாத் வதியுதினுடன் நன்கு பரீட்சயமுள்ள நீங்கள் திட்டமிட்டு; முஸ்லிம் காங்கிரசுக்குள் ஊடுவி இருக்கிறீர்கள். முஸ்லிம் காங்கிரசை உடைத்து சின்னாபின்னப்படுத்த நினைக்கின்ற சதிகாரர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இதுவரை செயற்பட்டிருக்கின்றீகள். கடந்த வருடம் நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரப் பணிக்கு தலைவர் ஹக்கீமினால் உங்கள் தலைமையில் சிலர் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கே முதலாவது மேடையில் பேசுவதற்கு நீங்கள் தயாராக இருந்த போது உங்களுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதினிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே மேடையை விட்டு இறங்கி உங்களுடன் வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு எந்தவித பிரச்சாரப்பணியிலும் ஈடுபடாமல் ஊருக்கு திரும்பியிருந்தீர்கள். அப்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது உங்கள் தலைவர் ரிசாத் தான் என்று.
இக்கட்சிக்கு வந்ததிலிருந்து தலைவருடனோ, உயர் பீட உறுப்பினர்களுடனோ நெருங்கிப் பழகவில்லை. மாறாக மாற்றுக்கட்சி உறுப்பினர்களுடனேய தேன் நிலவு கொண்டாடினீர்கள். கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக பழகியிருந்தால் மேயர் பதவியை இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது உங்களுக்கு சிபாரிசு செய்ய இக்கட்சியின் முக்கியஸ்தர்கள் யாரும் இருக்கவில்லை. உங்களது திமிரும், அகங்காரமும், ஆணவமுமே இதற்கு காரணமாகும்.
தலைவருடன் பேசுவதென்றால் ஊடகங்கள் மூலமாகவே பேசினீர்கள் உலகில் எந்தவொரு கட்சியிலும் தலைவரின் அனுமதியின்றி ஊடக மகாநாடு நடாத்தப்படவில்லை. கட்சிக்கட்டுப்பாட்டை தொடர்ந்து மீறியும் உங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாதது தலைவரின் பெருநதன்மையாகும். தொடர்ந்து உங்களது செய்திகள் ஊடகங்களில் வெளிவரவேண்டுமென்பதில் கவனமாக இருந்தீர்களே தவிர கட்சிக்கட்டுப்பாட்டை மதிக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான கல்முனைத் தொகுதியில் இக்கட்சியை உடைப்பதற்கு நன்கு திட்டமிட்டவகையில் சிங்கள் அரச இயந்திரம் உங்களை பாவிக்கின்றது. தன்னுடன் இருக்கின்ற ரவூப் ஹக்கீமைப் பகைக்காமலும், ரிசாத் பதியுதினின் ஆசிர்வாதத்துடனும், அதாஉல்லாவுடன் சேர்வது போன்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இக்கட்சிக்கென்று பாடல்கள் இருக்கின்ற போது உங்கெளுக்கென்று பாடல்கலை இயற்றி தலைவரையும், கட்சி முக்கியஸ்தர்களையும் போடுகாயாக நீங்கள் பயன்படுத்த முற்பட்ட போதே உங்களின் நடவடிக்கைகள் நன்கு அவதானிக்கபட்டிருந்தது.
எனவே பேரினவாதிகளினால் அக்கரைப்பற்று, காத்தான்குடி, ஓட்டமாவடி, மன்னார், புத்தளம், போன்ற பிரதேசங்களில் இக்கட்சியை உடைத்ததுபோன்று இவ்வூரிலும் உங்களைகொண்டு செய்யலாம் என்றால் எங்கள் உயிர்கள் இருக்கும்வரை நடக்காது. அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளான எங்களின் மையத்துக்களைத் தாண்டவேண்டும்.
ஏங்களின் சுயநிர்ணய உரிமையே எங்களின் இலக்கு எத்தனை தடைகள் வரினும் இழப்புகள் வரினும் தொடர்ந்து எங்கள் இலக்கை அடைய போராடுவோம்.
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
மத்திய குழு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சுhய்ந்தமருது.

0 comments:
Post a Comment