• Latest News

    July 19, 2014

    100 குடும்ப உறுப்பினர்கள். 3 மனைவி 36 குழந்தைகள் 4-வது மனைவி தேடும் நபர்

    பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிட மாக உள்ளது. அங்கு  மறைந் திருக்கும் தீவிரவாதிகளை ணுவம் குண்டு வீசி அழிக்கிறது. எனவே அங்கு தங்கியிருக்கும் மக்கள் பென்னு என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

    இந்த மக்களில் குல்ஷர்கானும் ஒருவர் இவரது குடுமபத்தில் மொத்தம் 100 உறுப்பினர்கள். குல்ஷார்கான் (வயது 54). இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 மனைவிகளுக்கும் மொத்தம் 36 குழந்தைகள் உள்ளனர். இருந்தும் அவருக்கு இல் வாழ்க்கையில் திருப்தி இல்லை என வருத்தப்படு கிறார். இன்னும் அதிக குழந் தைகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு அவரது மனைவிகள் ஒத்துழைக்கவில்லை. நாங்கள் குழந்தை பெறும் மெஷின் அல்ல என்று கூறி மறுத்து விட்டனர். மேலும் அவரை தங்கள் பக்கம் இப்போது நெருங்க விடுவது இல்லை

    இதனால் தனது வாழ்க் கையில் குல்ஷார் கான் பெரும் விரக்தி அடைந்து விட்டார். இஸ்லாமிய பெண்ணை 4-வது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்கான பெண் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.குஷ்ஷார் கான் தனது 3 மனைவிகள் மற்றும் 36 குழந்தைகளுடன் ஷாவா என்ற இடத்தில் இருந்து பன்னுவுக்கு குடிபெயர இருக்கிறார்.

    அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் உட்பட சுமார் 100 குடும்ப உறுப்பினர்களுடன் சாவா பகுதியில் 35 அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தார்.குல்ஷார்கான் 1976 ஆம் ஆண்டுமுதல் 1992 வரை 16 வருடங்கள் துபாயில் டாக்சி டிரைவராக பணியாற்றி உள்ளார். இவரது 2 மகன்கள் தர்போது துபாயில் டிரைவராக பணீபுரிந்து வருகிறார்கள்.

    குல்ஷார் கானுக்கு முதன் முறையாக 17 வய தில் திருமணம் நடந்தது. அப்து வயது உறவுக்கார பெண்ணை மணந்தார். அவர் களுக்கு 8 மகள்கள், 4 மகன் கள் உள்ளனர். 8 ஆண்டு களுக்கு பிறகு 17 வயது பெணையும், அதை தொடர்ந்து மற்றொரு பெணையும் மணந்து குழந்தைகளை பெற்றார். தற்போ 4-து திருமணத்துக்கு தயாராகி வருகிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 100 குடும்ப உறுப்பினர்கள். 3 மனைவி 36 குழந்தைகள் 4-வது மனைவி தேடும் நபர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top