• Latest News

    March 15, 2014

    நிந்தவூர் செங்கப்படை கண்டம் ஆத்தியடிகட்டு வாய்க்கால் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

    ஹில்டன்
    பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இதன் புனர் நிர்மான அபிவிருத்தி நடவடிக்கைகள்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

    இந்நிகழ்வில்  கல்முனை நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் குழுவினர். விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    இவ்  அபிவிருத்தி நடவடிக்கையின்மூலம் சுமார் ஏழு ஆயிரம் விவசாய காணிகளுக்கு முறையான, சீரான  நீர்பாசனம் கிடைக்கவுள்ளது.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் செங்கப்படை கண்டம் ஆத்தியடிகட்டு வாய்க்கால் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top