• Latest News

    March 07, 2014

    இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த காலம் வந்துள்ளது: நவநீதம்பிள்ளை

    இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான காலம் வந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய பதில்களை அரசாங்கம் வழங்க தவறி இருக்கிறது.:
    இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் தமது சொந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த காலம் வந்துள்ளது: நவநீதம்பிள்ளை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top