• Latest News

    March 13, 2014

    கணணி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

    சுலைமான் றாபி;
    இணைய தொழில்நுட்பத்தில் வன்பொருள் மற்றும் மென்பொருள் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (13.03.2014) நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலையில்  பாடசாலை அதிபர் எஸ்.எ.எஸ்.எம் சம்சுதீன் மௌலானா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம், கல்முனை கல்வி வலயப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், மாகாண செயல்திட்ட முகாமையாளர் கே. கலாநிதி, நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

    நிகழ்வின் இறுதியில் கணணி வன்பொருள் மற்றும் மென்பொருள் பயிற்சி நெறியினை  பூர்த்தி செய்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கணணி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top