• Latest News

    March 27, 2014

    முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு மு.காவிற்கு வாக்களியுங்கள்

    இந்த நாட்டில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் தென் மாகாணத்து முஸ்லிம்கள் எந்த ஓர் மாகாண சபை உறுப்பினரையும் பெற்றுக்கொள்ளாதது போன்ற தவறை இம்முறையும் செய்துவிடக் கூடாது என்று சில நாட்களுக்கு முன் மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாம் அந்த மக்களிடத்தில் வேண்டியிருந்தோம் அதேவிதமான வினயமான ஓர் வேண்டுகோளைத்தான் களுத்துறை மாவட்டத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சீனன் கோட்டை மக்களிடமும் இன்று முன் வைக்கிறோம். 19,000 ஆயிரம் முஸ்லிம்கள் வாக்காளர்களைக் கொண்ட மாத்தறை மாவட்டமும் 80,000 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட களுத்துறை மாவட்டமும் தமது சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறி விட்டது. இந்தத் துக்கம் நிறைந்த, துரதிஷ்டமான நிலைமை இம்முறையும் நடவாது பார்த்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு இம்முறையும் நம் எல்லோர் மீதும் பணிக்கப்பட்ட ஓர் விடயமாகும்.
    இவ்வாறு நேற்று இரவு பேருவளை சீனன் கோட்டை பஸார் வீதியில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பேருவளை அமைப்பாளர் ஹஸன் ஹாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றிய அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி குறிப்பிட்டார்.
    அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் நமது நாட்டின் பெரும்பான்மைச் சிங்களவர்களும், தமிழர்களும்இன ரீதியாகச் சிந்திக்க தலைப்பட்டுள்ளதை அண்மைக்கால நாட்டின் நடப்புக்கள் நமக்கு நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இச் சந்தர்ப்பத்தில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களும் புத்திக் கூர்மையுடன் நடந்து தமது முஸ்லிம் பிரதிகளின் தெரி;வை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பெருந்தேசியக் கட்சிகளான நீலம், பச்சை, சிவப்பு நிறங்களைக் கொண்ட கட்சிகளுக்கு வழங்கப்படுகின்ற முஸ்லிம் வாக்குகள் ஆற்றில் கரைத்த புளியாகப் போன கதையை நாம் மறந்து செயல்படக்கூடாது. 2009 ல் மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான வேட்பாளர்களுக்கு அம்மாவட்ட மக்கள் மேலும் 1800 வாக்குகள் வழங்கியிருந்தால் தென் மாகாண சபையில் ஓர் முஸ்லிம் பிரதி தெரிவு செய்யப்பட்டிருப்பார். இதே போன்றுதான் பெருந் தேசியக் கட்சிக்கு வாக்குகளைப் பிரித்து வழங்கியதால் களுத்துறை மாவட்டத்திலிருந்து இரண்டு மூன்று முஸ்லிம் பிரதிகளை இழந்திருக்கின்றோம்.
    எனவே அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துவரும் மத நல்லிணக்கமற்ற கசப்பான அனுபவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், நமக்கே உரித்தான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் முகமாகவும், களுத்துறை மாவட்டத்தின் பெரிய ஊர்களான பேருவளை, சீனன் கோட்டை, களுத்துறை, பாணந்துறை, தர்கா டவுன், அட்டுளுகம, மக்கோன, துந்துவ, வெலிப்பன்ன போன்ற கிராமங்களிலும் மாத்தறை மாவட்டத்தின் வெலிகம, திக்வல்ல, அக்குரஸ்ஸ, போர்வை, கொடப்பிட்டிய, கிரிந்த ஆகிய கிராமங்களின் உலமாக்கள் புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றுபட்டு இம் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமக்கு உரித்தான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கு காத்திரமானதும் பற்றுறுதி மிக்கதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
    பெருந்திரளாக இங்கு கூடியிருக்கும் நீங்கள் உங்கள் உடன் பிறப்புக்களான ஏனைய சகோதரர்களுக்கும் இவ் விடயத்தை வழக்கிலுள்ள நவீன முறைகளின் ஊடாக அறிவிப்புச் செய்யுமாறும் வேண்டுகின்றேன் என்றும் கூறுனார்.

    இக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், அஸ்லம், முத்தலிப் பாவா பாரூக், கட்சியின் பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச, மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு மு.காவிற்கு வாக்களியுங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top