மு.கா.வின் மூத்த போராளி தந்தை ரஹீம் எச்சரிக்கை
அரசியல் அநாதைகளாக்கப்பட்ட இந் நாட்டு முஸ்லிம்களை தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக 1989 காலப்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியையும் அதன் சின்னமான மரத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள்.
எந்தவொரு அழுத்தத்திற்கும் செவிசாய்க்காது இந் நாட்டு முஸ்லிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1989 பாராளுமன்றத் தேர்தலில் மு.கா என்னும் கட்சி போட்டியிட்டது என்பதை இந்த நாடே அறியும்.
அன்றைய காலகட்டத்தில் வடமாகாணம் வன்னியிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் வன்னி செல்வந்தர்களிடமும் புத்திஜீவிகளிடமும் சென்று வேட்பாளர்களாக வாருங்கள் என்று கேட்ட போது யுத்தம் பயங்கரவாதம், புலிப்பிரச்சினை என்பதை காரணமாகக் கொண்டு சொல்லி ஓடி ஒழிந்தவர்களும் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களையும் மு.காவையும் அதன் சின்னமான மரத்தையும் வசைப்பாடியவர்களும் உண்டு. இதில் ரிஷாத்தும் ஒருவர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அநாதைகளாக்கப்பட்ட இந் நாட்டு முஸ்லிம்களை தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக 1989 காலப்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியையும் அதன் சின்னமான மரத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள்.
எந்தவொரு அழுத்தத்திற்கும் செவிசாய்க்காது இந் நாட்டு முஸ்லிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1989 பாராளுமன்றத் தேர்தலில் மு.கா என்னும் கட்சி போட்டியிட்டது என்பதை இந்த நாடே அறியும்.
கொழும்பு மாவட்டத்திலே முஸ்லிம்களுடைய வாக்குகளை பெறுவதற்காக வேண்டி மு.காவின் வன்னியின் மூத்த போராளி என்று இல்லாத பொல்லாதவற்றை கூறி பத்திரிகையில் அறிக்கை விடுவது வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு விடயமாகும்.
வன்னியின் மூத்த போராளிகள் என்று கூறும் இடத்தில் விடத்தல் தீவை பிறப்பிடமாக கொண்ட என்.எஸ்.கே. காதர் முல்லைத்தீவு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட தந்தை ரஹீம் ஆகிய நான் மற்றும் மொஹம்மட் ராஜா ஆசிரியர், மன்னாரிலே மர்ஹூம் ரஹீம் மற்றும் சட்டத்தரணி சஹீட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான சுதந்தரமூர்த்தி அபூபக்கர் இவர்களை மூத்த போராளிகள் என்று எடுத்துக் கூறலாம்.
அதைவிடுத்து தான், தான் மூத்த போராளி என்று சொல்லும் ரிஷாத் எமது கட்சி மு.கா வை உடைப்பதற்காக அரசாலே ஏவப்பட்ட ஏவல் பிசாசு என்பதை கொழும்பு வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2000 ஆம் ஆண்டு வவுனியாவின் சுமதிபால பாராளுமன்ற உறுப்பினரின் தூக்குத் துக்கியாக செயல்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வன்னி மாவட்டத்தில் கதிரை சின்னத்தில் போட்டியிட்ட ஒரு நபர். ஆகதி முகாம்களில் வாழ்ந்த வடபுல முஸ்லிம்களை ஏமாற்றி மு.கா வின் வாக்குகளை பிரித்து சுமதிபாலாவை எம்.பி. ஆக்கியவர். இவ்வாறான ஒரு நபர் எவ்வாறு மு.காவின் மூத்த போராளி என்று பத்திரிகைகளில் அறிக்கை விடுவார். இவர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் நாமத்தையும், தற்போதைய தலைவர் ஹக்கீமின் நாமத்தையும் மு.கா வையும் பற்றி பேச அருகதையற்றவர் என்பதை வடபுல முஸ்லிம்களாகிய நாம் கொழும்பு வாழ் முஸ்லிம்களுக்கு எத்தி வைக்கிறோம். இவர் மறைந்த தலைவரையும், தற்போதைய தலைவரையும் மு.கா வையும் கூறி அரசியல் பிழைப்பு நடத்துவதில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து பத்திரிகையில் மு.கா வின் மூத்த போராளி என்று அறிக்கைவிடுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
இவ்வாறான அறிக்கைகளுக்கெல்லாம் மேல் மாகாண முஸ்லிம்கள் விலைபோக மாட்டார்கள். 29 ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைவிதியை நிர்ணியிக்கின்ற ஒரு தேர்தலாக நாங்கள் பார்க்கின்றோம். இந் நிலையில் மேல் மாகாண முஸ்லிம்கள் நிதானத்துடன் செயல்பட புறப்பட்டுள்ளனர் என்பதை இந்த ரிஷாத் போன்ற பச்சோந்திகளுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி எடுத்துக்காட்டுவார்கள்.
0 comments:
Post a Comment