ஓய்வு தொடர்பாக ஜெயவர்த்தனே, சங்ககரா இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிஷந்தா ரனதுங்கா மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
வங்கதேசத்தில்
டி20 உலகக்கிண்ண போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது இலங்கை
கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர்கள் ஜெயவர்த்தனே, சங்ககரா இருவரும்
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தனர்.
இந்த ஓய்வு தொடர்பாக இருவர் மீது இலங்கை தேர்வு குழு தலைவரும் முன்னாள்
வீரருமான ஜெயசூர்யா குற்றம்சாட்டி இருந்தார். இது பற்றி அவர்
தெரிவிக்கையில், ஜெயவர்த்தனே, சங்ககரா ஒய்வு பெறும் முடிவு எனக்கு முதலில்
தெரியாது. இருவரிடமும் நான் வெளிப்படையாகவே இருந்தேன். இது எனக்கு மிகுந்த
ஏமாற்றத்தை அளித்தது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டி20 உலகக்கிண்ணத்தை வென்று நாடு திரும்பிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு முடிந்த சில மணி நேரங்களில் ஓய்வு செய்தி தொடர்பாக
ஜெயவர்த்தனே, சங்ககரா இருவரும் இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிஷந்தா
ரனதுங்கா மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது,இலங்கை கிரிக்கெட் வாரியத்தின்
செயலாளர் எங்களை பற்றி சில கருத்துக்களை விமர்சித்து ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார். ஒரு பொறுப்புள்ளவராக இருந்தால் அவர் இப்படி செய்து
இருக்க மாட்டார். அவர் நாங்கள் என்ன ஊடகங்களுக்கு அறிவித்தோம் என்பது பற்றி
முதலில் எங்களிடம் விசாரித்து இருக்க வேண்டும்.
ஓய்வு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு வாரிய செயலாளர் தான் முழு பொறுப்பாவர் என்று கூறியுள்ளனர்.

0 comments:
Post a Comment