வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு
எம்.வை.அமீர்;
எதிர்வரும் 2014-04-19ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபாத்தில், சம்மாந்துறையில் பிறந்து விதானையாக கடமையாற்றி மரணித்தவர்களும், ஓய்வுபெற்றவர்களும், தற்போது சேவையிலுள்ளவர்களதும் அவர்கள் ஊருக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் முகமாகவும் அவர்களது வரலாற்றினை ஆய்வுக்குட்படுத்தி 'காமரி முதல் கிராம நிலதாரி வரை' எனும் பெயரில் சம்மாந்துறை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தினால் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இந்த நூலினை ஓய்வுபெற்ற நிருவாக கிராம உத்தியோகத்தர் அல் ஹாஜ் எம்.எம்.சலீம் ஜே.பீ. தொகுத்து எழுதியுள்ளார்.
2014-04-19ம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.அமீர் அவர்களும் சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாட் அவர்களுடன் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு நீல் டீ அல்விஸ் அவர்களும் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபார் திரு கே. விமலநாதன் அவர்களும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அவர்களும் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் ஏ.எல்.லத்தீப் அவர்களும் கலந்து கொள்வதுடன் அதிதிகளாக சம்மாந்துறை நம்பிக்கயாளர்சபை தலைவர் வைத்தியர் எம்.வை.எம்.முஸ்தபா அவர்களும் வீரமுனை ஸ்ரீ சித்தாயாத்தியை பிள்ளையார் ஆலய தலைவர் ஜீ.இராஜகோபாலபிள்ளை ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.இந்த நூலினை ஓய்வுபெற்ற நிருவாக கிராம உத்தியோகத்தர் அல் ஹாஜ் எம்.எம்.சலீம் ஜே.பீ. தொகுத்து எழுதியுள்ளார்.
0 comments:
Post a Comment