அஸ்ரப் ஏ சமத்:
கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சர் றிசாத்பதியுத்தீன் அமைச்சின்
அலுவலகத்திற்குள் இன்று மு.பகல் 12.00 மணியலவில் திடிரெண உட்புகுந்த
பொதுபலசேனாவைச் சேர்ந்த தேரர்கள் சிலர் மஹியங்கனை வட்டரக்க
விஜித்த தேரர் இங்கு உள்ளதாகவும் அவரைக் கொண்டுசெல்ல வந்தாகவும் கூறி 2
மணித்தியாலயம் அமைச்சில் இடையுருகளை ஏற்படுத்தினர்.
உடனடியாக விரைந்த மேல்மாகாணப் பிரதிப்
பொலிஸ் மா அதிபர் கலகம் அடக்கும் பொலிசார்களையும் அத்துடன் அண்மையில்
பொலிஸ் நிலையங்களில் இருந்தும் 200 மேற்பட்ட பொலிசார்கள் வரவலைக்கபபட்டு
அமைச்சினையும் அமைச்சின் அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்கினர்.
அத்துடன் அமைச்சின் முன்வாயில் உள்ள இரண்டு கேட்டுக்களும் யாரும்
உட்செல்லவோ வெளியே வரவோ முடியாமல் இரண்டு மணித்தியாலயங்கள் பூட்டுப் போடப்பட்டு மூடப்பட்டிருந்தன.
இதனால் இன்று அமைச்சுக்களின் பொதுசன
சந்திப்பு தினத்தில் உள்ளே சென்றவர்கள் வெளியே செல்வதற்கும்
உட்செல்வதற்கும் தடைபோடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அங்கு சமுகம்
தந்திருந்த பொதுபலசேனா தேரர்களுள் ஒருவரான வெள்ளம்பிட்டிய சுமனதம்ம தேரர்
ஊடகங்களுக்கு தகவல் தருகையில் -
மஹியங்கனையில் இருந்து வட்டரக்க விஜித்த
தேரர் நேரடியாக அமைச்சர் ரிசாத்பதியுத்தீனின் அமைச்சிக்குத் வந்துள்ளார்.
அவர் இங்குதான் இருக்கின்றார். ஆனால் எங்களுக்கு அமைச்சரின் அலுவலகத்தில்
உள்ள ஒரு அறையை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அல்லது அமைச்சின் சீ.சீ.டி
கமராவை கண்காணிப்பதற்கும் எங்களுக்கு அனுமதிக்கவில்லை.
அவர் அமைச்சர் அஸ்ரப் காலத்தில்
முஸ்லீம்களோடு இருந்து கொண்டு பௌத்த மதத்திற்கு இழுக்கு செய்கின்றார்.
தற்பொழுது இவர் அமைச்சர் ரிசாத்பதியுத்தீனோடு சேர்ந்து கொண்டு முஹம்மத்
வட்டரக்க தேரராக இருக்கின்றார். இவரை இன்று கண்டுபிடித்து அவரது மஞ்ச
சீலையைக் கழற்ற வேண்டும் அல்லது அவர் ஒரு நல்ல பௌத்த தேராக நாங்கள் மாற்ற
வேண்டும். அதற்காகவே அவரை பிடித்துக் கொண்டுபோகவே இங்கு வந்தோம். இந்தத்
தேரர் சில முஸ்லீம்களின் பணத்திற்காக பொளத்தர்களை காட்டிக்கொடுப்பதாகவும் பொதுபலசேனாவின் தேரர் வெள்ளம்பிட்டிய சுமனதம்ம தேரர்தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத்பதியுத்தீன் இங்கு
ஊடகங்களுக்கு தகவல் தருகையில் பொதுபலசேனாவுக்கு ஒரு அரசாங்க அமைச்சினை
உடைத்துக்கொண்டு யாரையும் தேடுவதற்கு இங்கு உரிமை இல்லை. அவர்கள் என்னையோ
அல்லது அமைச்சின செயலாளரையே முறைப்படி வந்த சந்திக்க முடியும். இவர்கள்
தேடுகின்ற தேரர் இங்கு வரவும் இல்லை. ஆனால் பொதுபலசேனாவின்
செயற்பாடுகளையும் மீண்டும் தான் கண்டிப்பதாகவும் அமைச்சர்
றிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை அமைச்சின் மக்கள்
சந்திப்பு நாளாகும் வடக்கில் இருந்து வந்த மக்கள் இந்த தேரர்களது
செயல்களால் உரிய அலுவலகளர்களைச் சந்திக்க முடியாமல் தமது
பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாமல் அமைச்சின் கேட்டில் காத்துநின்று
திரும்பிச் சென்றுள்ளனர். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.










0 comments:
Post a Comment