தீவிரவாத அமைப்புக்களான பொதுபலசேனா, இராவணா
பலய மற்றும் தேசிய சங்க சபை ஆகியவற்றின் பௌத்த தேரர்கள் இன்று கண்டியில்
மல்வத்த மகாநாயக்கரை சந்தித்துள்ளனர் .
இலங்கையின் பௌத்த மதம் ஆபத்துக்கு
உள்ளாகியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதாக
அந்த பௌத்த மதகுருமார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
பௌத்த பிக்குகளை காப்பாற்ற அரசாங்கம்
தவறுமானால், மகாசங்கம் அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும்
என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் மகாசங்கத்தினால் அரசாங்கத்தை
ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்று குறித்த தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர் .
0 comments:
Post a Comment