அரசாங்கத்தை ஸ்தாபிக்க மற்றும் கவிழ்க்க
தமது அமைப்புக்கு வலுவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
இதனை குறிப்பிட்டார். பொது பல சேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள்
குற்றம் சுமத்துவதாகவும் முடிந்தால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன்
நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் சிலர் முஸ்லிம் சகோதரத்துவத்தை பயத்திற்கு உள்ளாக்கி வைத்திருப்பதாகவும் இவர்கள் பொது பல சேனாவுடன் மோதி முஸ்லிம் மக்கள் முன்னிலையில் எதிர்ப்பு போல் காட்டி வருவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
விஜித தேரருக்கு எதிராக
இதனிடையே, தேசிய பல சேனா அமைப்பின் பொதுச்
செயலாளர் வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக மகியங்கனை பிரதேச சபை வளாகத்தில்
ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வட்டரக்க விஜித்த
தேரர், காவற்துறையினரின் பாதுகாப்பு மத்தியிலே பிரதேச சபைக்கு சென்றதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டரக்க விஜித தேரர் இவ்வாறே சபைக்கு
சென்றார் மகியங்கனை பிரதேச சபை வளாகத்தில், இன்று இயல்பற்ற சூழ்நிலை
ஏற்பட்டது. வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்
காரணமாகவே, இயல்பற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இதன்காரணமாக, வட்டரக்க விஜித்த தேரர், பிரதேச சபையின் பின்புறத்தால் சபைக்கு பிரவேசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-TC
https://www.youtube.com/watch?v=KE-131lAxkE
https://www.youtube.com/watch?v=KE-131lAxkE
0 comments:
Post a Comment