2015ஆம்
ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு எதிர்வரும் 24ஆம் திகதி
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்
பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வழக்கம் போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த
முறையும் வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுவார்
முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நாளை மறுதினம் அமைச்சரவை அனுமதிக்காக
முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .