• Latest News

    April 13, 2014

    பங்களாதேஷ் சென்று கிரிக்கட் பார்க்க முடிந்த உங்களால், துன்பப்படும் மன்னார் மக்களை ஏன் பார்க்க முடியவில்லை ?

    பங்களாதேஷ் சென்று கிரிக்கட் மெச் பார்க்க முடிந்த உங்களால், துன்பப்படும் மன்னார்-மறிச்சிக்கட்டி மக்களை ஏன் நேரில் சென்று பார்க்க முடியவில்லை, பல மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பள்ளிவாயல் விடயம் ஒன்று தொடர்பாக கொழும்பில் அவசரக் கூட்டம்
    ஒன்று கூட்டப்பட்டவேளை அதில் கலந்துகொள்வது பற்றிக் கவலைப்படாத நீங்கள் அன்றையதினம் கண்டியில் நடைபெற்ற ரக்பி போட்டியைப் பார்வையிடச் சென்று ரசித்துக்கொண்டிருந்தீர்கள்.  என கேள்வியுடன்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் .
    இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை,


    “பங்களாதேஷ் சென்று கிரிக்கட் மெச் பார்க்க முடிந்த உங்களால், துன்பப்படும் மன்னார் மக்களை ஏன் நேரில் சென்று பார்க்க முடியவில்லை” SLMC தலைவரிடம் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கேட்கிறார்:
    தமது சொந்த நிலங்கள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீளக்குடியேறுவதற்கு நிரந்தர இடம் ஏதுமின்றி கடந்த பல வாரங்களாக அல்லல படும் மன்னார்- மறிச்சிக்கட்டி மக்கள் விடயத்தில், SLMC தலைவர் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டும் குறுஞ்செய்தி ஒன்றினை பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் அனுப்பிவைத்துள்ள குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    ‘அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்புடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு,
    அதிகாரம் உள்ளவர்களால் தமது சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையிலுள்ள மன்னார்-மறிச்சிக்கட்டி மக்களின் விடயங்களைக் கவனிக்கும் நோக்கில் இரண்டாவது தடவையாக நேற்று அங்கு சென்றிருந்தோம்.
     அப்போது நாம் அறிந்துகொண்ட ஒரு விடயம் எமக்கு அதிர்ச்சி அளிக்கின்றது. அதாவது, கடந்த பல வாரங்களாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் இம்மக்களை நேரில் சென்று பார்ப்பதற்குக் கூட நீங்களோ அல்லது (இப்பிரதேசத்திற்குப் பொறுப்பான உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட) உங்களது பிரதிநிதிகள் எவருமோ அக்கறை காட்டவில்லை. உங்களுக்கு இருக்கும் பதவியையும் வசதி வாய்ப்புக்களையும் பயன்படுத்தி T20 கிரிக்கட் இறுதிப்போட்டியைக் கண்டு களிப்பதற்கு நேரம் செலவழித்து பங்களாதேஷிற்கு செல்ல முடிந்த உங்களால்அப்பதவியையும் வசதி வாய்ப்புக்களையும் வழங்கிய அதே மக்கள் துன்புற்றிருக்கும் நிலையில் அவர்களை நேரில் சென்று பார்ப்பதனை எப்படி புறக்கணிக்க முடிந்தது என்பதனை என்னால் நம்பமுடியவில்லை. மேலும், இம்மக்கள் தொடர்பாக சிவில் சமூகத்தினால் கொழும்பில் கூட்டப்பட்ட முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் நீங்கள் அக்கறை காட்டவில்லை.
    இவ்வாறே பொறுப்பற்ற முறையில் நீங்கள் கடந்த காலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பல மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பள்ளிவாயல் விடயம் ஒன்று தொடர்பாக கொழும்பில் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டவேளை அதில் கலந்துகொள்வது பற்றிக் கவலைப்படாத நீங்கள் அன்றையதினம் கண்டியில் நடைபெற்ற ரக்பி போட்டியைப் பார்வையிடச் சென்று ரசித்துக்கொண்டிருந்தீர்கள்.
    அல்லாஹ்வையும் இறுதித் தீர்ப்பு நாளையும் பயந்துகொள்ளுங்கள். உங்களைப் போன்ற தலைவர்களை அப்பாவித்தனமாக இன்னும்  நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் மீதான உங்கள் கடமைகளை புறக்கணித்தமைக்காக அந்த நாளில் நீங்கள் நிச்சயம் பதில் சொல்லவேண்டி இருக்கும்.
    பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் (PMGG)’
    அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு, பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆங்கிலத்தில் அனுப்பிவைத்த குருஞ்ச்செய்தியின் முழுமையாக கீழே தரப்பட்டிருக்கின்றது.
    Salam. Dear Min.Rauff Hakeem,
    During our 2nd visit to Marichchukkaddy (Mannar) to attend to the matters of the poor people whose own lands are taken over by those with power, we were shocked to know that NEITHER you NOR your representatives ( including your MP for the area ) even bothered to visit these innocent people who have been suffering for the last several weeks without even the basic needs. While you were able to make a jolly visit to Bangladesh to enjoy the T20 finals using the position and perks, I can’t just believe how you could ignore to at least visit these people whose mandate gave you this position and perks. Also, you didn’t care to to attend important meetings convened by civil society in Colombo on these matters.
    I remember you acted the same way earlier as well…
    When an urgent meeting was convened  in Colombo several months ago regarding a ‘Dehiwela mosque issue’, you were enjoying a rugby match in kandy without caring to attend it.
    Fear Allah and the day judgment on which you will be made accountable for ignoring your duties and responsibilities over the people who still innocently trust leaders like you.
    Engr. Abdur Rahman (PMGG)
    PMGG ஊடகப்பிரிவு
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பங்களாதேஷ் சென்று கிரிக்கட் பார்க்க முடிந்த உங்களால், துன்பப்படும் மன்னார் மக்களை ஏன் பார்க்க முடியவில்லை ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top