• Latest News

    May 18, 2014

    யூத் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் குழப்பம்: இறுதிப் போட்டியில் ஒல்லாந்தர் அணி வெற்றி

    எஸ்.அஷ்ரப்கான்;
    மெஸ்ரோ அமைப்பின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் 'யூத் பிரிமியர் லீக்' மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை வியாழக்கிழமை (15) இறுதி நாள் நிகழ்வு (16) கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

     சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியும், மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான எஸ்.எம்.எம்.லத்தீப் கலந்து கொண்டு நிகழ்வினை வைபவ ரீதியாக தேசியக் கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
    இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.ஏ.ஏ. அஸ்வத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வி.எம்.றஜாய், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உதவிச் செயலாளர் இஸட்.எம்.சாஜீத் உள்ளிட்ட போட்டியில் பங்குபற்றும் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதன்போது சுற்றின் முதல் போட்டிக்கான நாணயச் சுழற்சியினை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.லத்தீப் செய்தவைத்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

    'யூத் பிரிமியர் லீக்' மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாகும். இதில் 14 அணிகள் பங்குபற்றுகின்றன.

    இறுதிநாள் நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது இளைஞர் மத்திய நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அம்பாறை இளைஞர் வள நிலைய பொறுப்பதிகாரி ஏ.அமீர், இளைஞர் சேவைகள் உத்தியோஸ்தர்களான எம்.எச்.எம்.பைஸர் அமீன, எம்.எம்.பரீட் , ஏ.முபாறக் அலி, எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வித்துறை போதனாசிரியர் ஐ.எம்.கடாபி, பாராளுமன்ற  உறுப்பினரின் இணைப்பாளர் நௌபர் ஏ.பாவா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

    சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களான றிலக்ஸ் இளைஞர் கழகம், செறன்டிப், இல்ஹாம், பிளைங் ஹோர்ஸ், வுளுமிங் ஸ்ரீ லங்கா, ருவின்னர்ஸ், ஒல்லாந்தர், போத்துக்கேயர், ஜெனீவ் ஸ்டார், ஹொலி ஹீரோ, ஸாஹிறா, அல்-வாஹிதியா, குவிர்டன் ஆகிய இளைஞர் கழகங்கள் பங்குபற்றின.

    இறுதிப்போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தெரிவான ஸாஹிறா இளைஞர் அணி, இல்ஹாம் இளைஞர் அணி ஆகியன இறுதிப்போட்டியில் பங்குபற்ற ஏற்பாட்டுக் குழுவின் போட்டி விதிகளை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக  இரு அணிகளையும் நீக்கிவிட்டு முறையே 3, 4 ஆம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் இறுதிப் போட்டியில் போத்துக்கேயர் இளைஞர் கழகமும், ஒல்லாந்தர் இளைஞர் கழகமும் மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற போத்துக்கேயர் அணி முதலில் களத்தடுப்பை எடுத்தக்கொண்டனர். இதனடிப்படையில் துடுப்பெடுத்தாடிய ஒல்லாந்தர் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 61 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போத்துக்கேயர் அணி 41 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி கண்டது. இதனடிப்படையில் ஒல்லாந்தர் அணி வெற்றிபெற்று சாய்ந்தமருத 'யூத் பிரிமியர் லீக்' சம்பியனாக தெரிவானது. ஒல்லாந்தர் அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை அதன் தலைவர் எம்.ஐ.எம். முபீனிடம்  அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

    இந்நிகழ்வின்போது, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் சாய்ந்தமருது பிரதேச  இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யூத் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் குழப்பம்: இறுதிப் போட்டியில் ஒல்லாந்தர் அணி வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top