ஏ.எம். ஹூசைனி ;
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றினை வைத்தியசாலை அபிவிருத்திச் சபை முன்னெடுத்துள்ளதாக அதன் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை கடந்த 3 வருடங்களாக வைத்தியசாலையின் அபிவிருத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பு செய்வருகிறது.
இதற்கு பின்புலனாகவிருந்து ஒத்துழைப்பு வழங்கிய எமது பிராந்திய அரசியல் தலைமைகள், உயரதிகாரிகள், வைத்தியர்கள், எமது பிரதேச தனவந்தர்கள், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றினை வைத்தியசாலை அபிவிருத்திச் சபை முன்னெடுத்துள்ளதாக அதன் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை கடந்த 3 வருடங்களாக வைத்தியசாலையின் அபிவிருத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பு செய்வருகிறது.
வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் புதிய சிந்தனைகள், வேகமான செயற்பாடுகள் அவசியமாவதுடன் ஆர்வமுள்ள புதிய அங்கத்தவர்களும் அவசியமாகும்.
இதற்கமைவாக 01.05.2014 – 15.05.2014ம் திகதி வரையான காலப்பகுதியை அங்கத்துவ வாரமாக பிரகடனப்படுத்தி புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள எண்ணியுள்ளோம்.
இதில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்கக் கூடியவர்கள் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளலாம்.
அங்கத்தவராக சேர்ந்து கொள்ள விரும்புவோர் ஆயிரம் ரூபாயினை வைத்தியசாலையின் அபிவிருத்தி நிதிக்காக செலுத்துவதன் மூலம் அங்கத்தவராகலாம்.
எனவே விரும்புவோர் அங்கத்துவப்படிவத்தினை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வரவேற்பாளர் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
அங்கத்துவப்படிவத்தினை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் 338-1-001-1-0003545 என்ற இலக்க சாய்ந்தமருது மக்கள் வங்கி நடைமுறைக் கணக்கில் ஆயிரம் ரூபாயினை வைப்புச் செய்து, பற்றுச்சீட்டினை காரியாலயத்தில் ஒப்படைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் இம்மாத இறுதி வாரத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு 077 350 850 9 ஃ 077 368 019 0 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment