• Latest News

    May 08, 2014

    கல்விப் பணிக்கு தன்னை அர்ப்பணித்த இஸ்மாயில் முகாந்திரம் சேரின் மறைவு மருதமுனைக்கு பேரிழப்பாகும்

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் யூசுப்லெப்பை இஸ்மாயில் முகாந்திரம் இன்று (07-05-2014) மாலை காலமானார.; இவர் 1952-10-03ம் திகதி  மருதமுனையைச் சேர்ந்த யூசுப்லெப்பை நபிசா உம்மா தம்பதிக்கு மகனாகப்பிறந்தார். இவர் 33 வருடங்களும் 6 மாதங்களும் 9 நாட்களும் ஆசிரியராக் கடமையாற்றி 2012-10-02ல் ஓய்வு பெற்றார். இவர்  தமிழ் இலக்கியத்துறையில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவராவார.

    தனது கல்வியை முதலாம் வகுப்பு தொடக்கம் க.பொ.த சாதாரன தரம் வரை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூயில் கற்றார். பின்னர் 1976ம் ஆண்டு க.பொ.த உயர் தரப்  பரிட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றி சித்தி பெற்றார்.


    அதன் பின்னர் 1979-03-26ம் திகதி ஆசிரியராக முதல் நியமனம் பெற்று தான் கல்வி கற்ற மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கடமையைப பொறுப் பெற்றார். அல்-மனாரில் இருந்து 1980-02-01ம் திகதி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று 1983-12-31ம் திகதி அங்கு கடமையாற்றினார்.   

    1984-01-01-தொடக்கம் 1986-12-31-வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்ச்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு 1987-01-01ம் திகதி  தொடக்கம் 1987-06-01ம் திகதி வரை பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன்  வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.

    இறுதியாக 1987-06-01ம்  திகதி மீண்டும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தனது கடமையைப் பொறுப்பெற்றார். 2012-10-02ம் திகதி ஓய்வு பெறும் வரை அங்கு தனது ஆசிரியப் பணியை மேற்கோண்டார்.

    1998-01-01-ம் திகதி தேசிக் கல்வி நிறுவகத்தில் கல்வி மாணி பட்டத்தைப் பூர்த்தி செய்தார். கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் அதிகமான கவிப்பாக்களை வாழ்த்துப் பாடல்களையும்  இயற்றியுள்ளார்.

    மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கையாளராகவும்,செயலாளராகவும் 17 வருடங்கள் பணியாற்றியுள்ளார். மார்க்கக் கடமைகளை ஒழுங்கானப் பேணிவந்தவர்.
    எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் இவர் எப்போதும் புன்னகையுன் இருப்பார்.

    மருதமுனையைச் சேர்ந்த மௌலவி சாஹூல் ஹமீத் அவர்களின் புதல்வியான நஜ்முன்னிஸாவை 1979ம் 03-25ம் திகதி திருமணம் முடித்தார். இவர்களுக்கு இனாபா நஸ்கத், இஹ்லாஸ், இஹ்ஸா பஹ்ஜத், ஆகிய இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளiயும் உள்ளனர்.
    தனது  கற்பித்தலால் பலரை உருவாக்கிய இவருக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திபபோம்;.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்விப் பணிக்கு தன்னை அர்ப்பணித்த இஸ்மாயில் முகாந்திரம் சேரின் மறைவு மருதமுனைக்கு பேரிழப்பாகும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top