
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் தனது நன்றியை மக்களுக்கு தெரிவித்தார். தம்மை ஆதரித்த மக்களை கைவிடமாட்டேன் என்று நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்தார். அனைவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் நரேந்திர மோடி வதோதரா விழாவில் மோடி தொவிலித்துள்ளார்.
5 லட்சம் வாக்க வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்கு மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். தன்னிடம் பொறுப்பை வழங்கிய அனைவரையும் வணங்குகிறேன். வதோதராவில் பிரசாரம் செய்ய தமக்கு நேரம் கிடைக்காத நிலையிலும் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைத்ததற்காக மோடி நன்றியயுடன் கூடிய நெகிழ்ச்சியை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment