• Latest News

    June 19, 2014

    அக்கரைப்பற்று மாநகர சபையில் டீடீளு க்கு எதிரான கண்டத் தீர்மானம்

    அண்மையில் அளுத்கம பேருவள பிரதேசங்களில் பொதுபலசேனா அமைப்பினால் காட்டுமிராண்டித்தனமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதலால் அப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் உடமைகள் பெருமளவு தேசப்படுத்தப்பட்டுள்ளதுடன் நமது சகோதரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களும் காவு கொள்ளப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவம் நமக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்தது.

    இவ்வாறு  அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி  இன்று இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் தெரிவித்தார்.

     முஸ்லிம்களின் மிது nமுற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டனப் பிரகடனம் ஒன்றினை முன் வைத்து உரைலயாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
    நாட்டில் 3 தசாப்தகாலமாக பீடித்திருந்த கொடூர பயங்கரவாதம் எமது ஜனாதிபதி அவர்களின் தலைமையில் முற்று முழுதாக நீக்கப்பட்டு மூவினங்களும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும்  இச்சூழ்நிலையில்இஅதனை சகிக்க முடியாத பொதுபலசேனா அமைப்பு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படுகின்றது.

    அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உரையில் இனங்களுக்கிடையில் ஏற்படும் முறுகல் நிலை பாரிய யுத்தத்திற்கு சமமானது என அவர் அங்கு தெரிவித்திருந்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூற விரும்புவதாக தெரிவித்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் மேலும்இ ஜனாதிபதி அவர்களுக்கு கணிசமான முஸ்லிம்களும் அவரின் வெற்றிக்காக வாக்களித்துள்ளதாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்   இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கும் இன்னும் பல விடயங்கள் உள்ளடங்கியதான மகஜர் ஒன்றையும் அக்கரைப்பற்று மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின்  இணக்கத்துடன் தீர்மானமாக நிறைவேற்றி ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் தெரிவித்தார்.

    இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதற்காக அனைத்துத் தரப்பினரும் உழைக்குமாறும் அதற்காய் பிரார்த்திக்குமாறும் வேண்டுவதாகவும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்கரைப்பற்று மாநகர சபையில் டீடீளு க்கு எதிரான கண்டத் தீர்மானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top