நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக
தெரிவாகி இருப்பது இலங்கை அரசியல் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என மேல்
மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில கணவர்கள் மனைவிமாரை அவமதிக்க
வேண்டுமாயின், மோடி ( முட்டாள் மனுஷி) என்று கூறுவார்கள். மோடிக்கு (
முட்டாள் மனுஷிக்கு) இது புரியாது என்றுக் கூறுவார்கள்.ஆனால் இனிமேல்
மனைவியை அவமதிக்க வேண்டும் என்றால் மோடி என்று சொல்ல மாட்டார்கள். அந்த
வார்த்தை தற்போது அவமதிப்பல்ல கௌரவம்.
இலங்கைக்கு இருக்கும் தாக்கம் அதுவல்ல.
மோடியின் வெற்றி இலங்கைக்கு நன்மையானது என ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன. நான் அதனை அப்படி காணவில்லை.இந்தியாவில் கடந்த
காலங்களில் ஸ்திரமற்ற அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்து வந்தன. 70 ஆம் 80 ஆம்
ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அங்கு நிலையான ஸ்திரமான ஆட்சி
ஏற்பட்டுள்ளது.
இந்தியா பலமாக இருக்கும் காலத்தில்,
அமெரிக்கா உலகில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தனக்கு தெற்காசியாவில்
மேற்கொள்ள முடியுமாக இருக்க வேண்டும் எண்ணியது.தெற்காசியாவில் உள்ள சிறிய
நாடுகள் இந்தியாவுக்கு தேவையான வகையில் செயற்பட வேண்டும் என இந்தியா
விரும்பியது. நாங்கள் இந்தியாவை எமது பெரிய அண்ணன் என்று நினைத்தோம்.
மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் நிலையான
அரசாங்கம் இருக்கவில்லை. தொடர்ந்தும் கூட்டணி அரசாங்கங்களே பதவியில்
இருந்து வந்தன. சிறிய கட்சிகள் ஆட்டி வைக்கும் வகையில் அரசாங்கங்கள்
அமைந்தன.இதனால் இலங்கை பற்றி தேடிப்பார்க்க இந்தியாவுக்கு நேரம்
இருக்கவில்லை. தற்போது வலுவான அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது எனவும் உதய
கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.-tc
0 comments:
Post a Comment