• Latest News

    June 01, 2014

    முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை முறையிட தொடர்பு கொள்ளவும்

    RRT: 
    முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை முறையிடுவதற்காக அவசர தொலைபேசிச் சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் 
    செயற்பாடுகளை இந்த தொலைபேசிச் சேவையின் ஊடாக 24 மணித்தியாலங்களும் முறையிட முடியும்.

    இதன் மூலம் குறித்த செயற்பாட்டிற்கு எதிரான சட்ட நடவடிக்கை, முன் ஆயத்தம், உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்தல் உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
    075 9700910,
    075 9700911,
    075 9700912,
    075 9700913

    ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை முறையிட முடியும். முஸ்லிம் புத்திஜீவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பினாலேயே இந்த அவசர தொலைபேசிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை முறையிட தொடர்பு கொள்ளவும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top