• Latest News

    June 30, 2014

    அளுத்கம தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை எங்களுக்குத் தெரியும்! - ரணில்

    ஸ்ரீகொத்த தாக்குதல் உள்ளிட்ட இன்னும் பல்வேறு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட குண்டர்களே அளுத்கம மற்றும் பேருவலை தாக்குதலுக்கும் சம்பந்தப்பட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

    தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர், இதன்பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தெளிவுறுத்தினார்.


    தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பேருவலை மற்றும் அளுத்கம பகுதியைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற் கண்டவாறு தெளிவுறுத்தியுள்ளார்.

    அளுத்கம, பேருவலை மற்றும் பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளானமை பற்றி தான் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
    (கேஎப்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அளுத்கம தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை எங்களுக்குத் தெரியும்! - ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top