
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட
உறுப்பினர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குரோத உணர்வைத் தூண்டும் வகையில்
கருத்துக்களை வெளியிடுவதாக முஸ்லிம் கவுன்சில் குற்றம் சுமத்தியுள்ளது.
முஸ்லிம்
சமூகம் குறித்த சம்பிக்கவின் கடுமையான
விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அமைச்சரின் கருத்துக்களுக்கு சில
பதில்களை அளிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
அலுத்கம பிரதேசத்தில் 3000 முஸ்லிம்கள்
ஆயுதங்களுடன் சிங்களவர்களை தாக்கத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு
அடிப்படையற்றது .இலங்கையில் ஜிஹாதிய, கடும்போக்குடைய முஸ்லிம்
அமைப்புக்கள் இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள
முடியாது என முஸ்லிம் கவுன்சில் தெரிவித்ள்ளது
சிரேஸ்ட அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு
குரோத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை வருத்தமளிப்பதாக அந்த
கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது
0 comments:
Post a Comment