பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர்
ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை
ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
என ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன .
கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியமைக்கான
எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்டையில் நபர்களை கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற
மோதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணகளை அடுத்த இரண்டு
வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
ரோஹன தெரிவித்துள்ளார்
குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற
சம்பவங்கள் குறித்து 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
சம்பவங்கள் தொடர்பில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 30 பேர்
கைது செய்யப்படவுள்ளனர் எனவும் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்

0 comments:
Post a Comment