உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் அணி
படுதோல்வியை சந்தித்த நிலையில் அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
ஆட்டத்தின் முதல் பாதியில் 5-0 என்ற கோல்கள் கணக்கில்
ஜேர்மனி முன்னிலையில் இருந்தது. இதன் போதே பிரேஸிலின் தோல்வி அனேகமாக உறுதி
செய்யப்பட்டுவிட்டது.
முதலில் ஒஸ்காரின் முயற்சியை ஜேர்மனியின் கோல்
காப்பாளர் தடுத்தார். உடனே பாலினியோ அடுத்தடுத்து இரண்டு ஷாட்களை கோல்
கம்பத்தை நோக்கி அடிக்க அதனையும் அற்புதமாக தடுத்தார் ஜேர்மனிய கோல்
காப்பாளர். குறைந்த நேர இடைவெளியில் 3 வாய்ப்புகள் பிரேஸிலுக்குக்
கிடைத்தன. ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை.
ஆட்டத்தின்
69ஆவது நிமிடத்திலும் பிரேஸிலுக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தது எனினும்
ஜேர்மனி அந்த வாய்ப்பையும் தனக்கு சாதமாக்கிக் கொண்டது.
90ஆவது நிமிடத்தில் போதும் என்று மனதிற்குள் ஜேர்மனி ஓய்ந்துபோன தருணத்தில்தான் ஒஸ்கார் பிரேஸிலுக்காக ஒரு கோலை அடித்தார்.
ஆனால்
பிரேஸில் கால்பந்து வரலாற்றிலேயே தன் சொந்த மண்ணில் அந்த அணி அடித்த கோல்
ஒன்றிற்கு வரவேற்பு இல்லாமல் போனது இதுவே முதல் முறை எனலாம்.
திறமையான
அணி ஒன்றை ஜேர்மனியின் ஆட்டம் தகர்த்ததோடு ஒரு தேசத்தின் நம்பிக்கை, கனவு
அனைத்தும் தகர்ந்து போனது. எந்த மகிழ்ச்சிக்காக, சந்தோஷத்திற்காக இந்த
உலகக் கிண்ண போட்டிகளை கடுமையான எதிர்ப்பையும், ஏழ்மையையும் மீறி
பிரேசிஸில் நடத்தியதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
அந்த 6 நிமிடங்கள் (23, 24, 26, 29ஆவது நிமிடங்களில் நான்கு கோல்கள்) ஒரு தேசத்தின் கனவு சிறுகச் சிறுக அழிக்கப்பட்டது.
ஏதோ
இந்தத் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற உரிமை பெற்ற அணி என்பது போலவே
சொல்லாடல்கள் உருவாகியிருந்தன. ஆனால் அந்த அணியின் உண்மையான பலவீனத்தை
மறைத்திருந்த சொல்லாடல்களை ஜேர்மனியின் ஆட்டம் தவிடு பொடியாக்கியது. -Newsfirst.lk





0 comments:
Post a Comment