• Latest News

    July 09, 2014

    தேன் சாப்பிட்டால் சுகப்பிரசவமாகும்

    கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    ஏனெனில் பிரசவத்தில் மறுஜென்மம் எடுப்பதால் உணவுகளில் சில ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    அதுவும், சுகப்பிரசவம் அமைய வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

    கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதம் முதல் சாதம் கொதிப்பதில் முதல் கொதி வந்ததும் அந்த கொதிநீரை ஒரு டம்ளர் எடுத்து சிறிது பணங்கற்கண்டு சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும்.

    சிறிது வெந்தயம் சிறிது பச்சரிசி 5 பல் பூண்டு மூன்றையும் குழைய வேகவைத்து கடைந்து குடிக்கலாம்.

    பாலுடன் பூண்டை உரித்து போட்டு நன்கு வேகவைத்து கடைந்து இரவில் இதனை சாப்பிடலாம். கர்ப்பிணிபெண்கள் மாதுளம் பழம் ஜூஸ் குடிக்கலாம்.
    தாய், சேய் இருவருக்கும் மிகவும் சிறந்தது மட்டுமில்லாமல் ரத்தம் விருத்தியாகும்.

    சோம்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து ஒன்பதாம் மாதம் முதல் குடிக்க வேண்டும்.

    இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரை இடுப்பு கால்களுக்கு ஊற்றி கொள்ள வேண்டும். பிரசவவலி எடுத்தவுடன் தேனை எதுவும் கலக்காமல் நேரடியாக உள்ளுக்குள் சாப்பிடவேண்டும். மீதமுள்ள தேனை கருஞ்சீரகம் பொடி கலந்து வயிற்றைச் சுற்றித் தடவினால் எந்த வித சிரமமும் இன்றி சுகப்பிரசவம் ஏற்படும்.

    இது தவிர நாடி சுத்தி பிராணயாமத்தையும் பக்தகோணாசனம் என்ற கர்ப்பஸ்திரீகள் செய்யக்கூடிய ஆசனத்தையும் விடாமல் செய்து வர வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேன் சாப்பிட்டால் சுகப்பிரசவமாகும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top