பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு சமுகமளித்திருந்தார். ஜனாதிபதி சபைக்குள் சமுகமளித்த மறுகணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச சபையிலிருந்து வெளியேறினார்.
நேற்றைய அமர்வின்போது சுமார் 2.20 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார். எனினும், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்த மறுகணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சபையை விட்டு வெளியேறினார்.
பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமானது. சபையின் பிரதான நடவடிக்கைகள் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் என்பவற்றின் நிறைவில் போக்குவரத்து அமைச்சர் வெல்கம மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.நேற்றைய அமர்வின்போது சுமார் 2.20 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார். எனினும், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்த மறுகணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சபையை விட்டு வெளியேறினார்.
இதன்போது 2.20 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகச சபைக்குள் சமுகமளித்தார். ஜனாதிபதி சபைக்குள் சமுகமளித்த மறுகணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச சபையிலிருந்து வெளியேறினார்.
எனினும், எதிர்க்கட்சிகளின் பக்கமாக ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்களான அருந்திக பெர்னாண்டோ, லொஹான் ரத்வத்த உள்ளிட்டோர் ஜனாதிபதி அமரும் ஆசனத்துக்கு பின்புறமாக வந்து அமர்ந்து கொண்டனர்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் எரான் விக்கிரமரட்ண எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தார். எரான் எம்.பி. உரையாற்றி முடியும் வரையில் சபையில் அமர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி, சில சந்தர்ப்பங்களில் எரான் எம்.பி.யின் கருத்துகளை ஆமோதித்தும் சுவாரஷ்யமான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
இதன்போது, பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்களைப் பார்த்து ஜனாதிபதி கையசைத்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, எரான் எம்.பி.யின் உரையின் நிறைவின் 2.40மணியளவில் ஜனாதிபதி சபையிலிருந்து வெளியேறினார்.

0 comments:
Post a Comment