• Latest News

    July 09, 2014

    நெதர்லாந்துடன் இன்று மோதல்: சாதிப்பாரா மெஸ்ஸி

    உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    இதில், அர்ஜென்டினா அணிக்கு மெஸ்ஸியும் நெதர்லாந்துக்கு ராபென், ராபின் நம்பிக்கை தருகின்றனர்.

    இன்றைய இரண்டாவது அரையிறுதியில், உலகத்தரவரிசையில் ஐந்தாவது இடத்திலுள்ள அர்ஜென்டினா, 15வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    உலக்க்கிண்ண கால்பந்து தொடரில் 1978, 1986 என இரு முறை  கிண்ணம் வென்றது அர்ஜென்டினா. இப்போது ஐந்தாவது முறையாக அரையிறுதியிக்கு முன்னேறிய இந்த அணி, கடந்த 1986க்குப் பின், தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று வந்துள்ளது.

    இருப்பினும், இந்த ஐந்து போட்டிகளிலும் ஒரு கோல் வித்தியாசத்தில் தான் வென்றது. தவிர, அணியின் மொத்த கோல் எண்ணிக்கை  8ஐ தாண்டவில்லை.

    இதில் அணித்தலைவர் மெஸ்ஸி மட்டும் 4 கோல்கள் அடித்துள்ளார். மற்றபடி ஏஞ்சல் டி மரியா, ரோஜோ, ஹிகுவேன் தலா ஒரு கோல் அடித்தனர்.

    ஏற்கனவே, அணியின் வெற்றிக்கு மெஸ்சியை மட்டும் அதிகமாக நம்பியுள்ள நிலையில், காயம் காரணமாக மரியா விலகியது அர்ஜென்டினாவுக்கு பெரிய இழப்பு.

    இருப்பினும், காயம் குணமடைந்த அகுயரோ, தடையில் இருந்து மீண்ட மார்கஸ் ரோஜோ அணியில் இருப்பது, தாக்குதல் பிரிவுக்கு சற்று கூடுதல் பலம் தான்.

    அதேநேரம், தற்காப்பு பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை எனில், நெதர்லாந்து அணியை சமாளிக்க முடியாது.

    ஐரோப்பிய அணியான நெதர்லாந்து, உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு 1974, 1978, 2010 என மூன்று முறை தகுதி பெற்ற போதும், ஒரு முறை கூட கோப்பை வென்றது கிடையாது.

    இப்போது ஐந்தாவது முறையாக நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தொடரின் துவக்கத்தில் இந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என  ஒருவரும் கணித்தது கிடையாது. ஏனெனில், அந்தளவுக்கு பலவீனமாக கருதப்பட்டது. ஆனால், முதல் போட்டியில் ஸ்பெயினை வெற்றி கொண்டதுடன் தொடர்ந்து ஐந்து வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

    இதுவரை தலா 3 கோல்கள் அடித்த அர்ஜென் ராபென், ராபின் வான் பெர்சி, மெம்பிஸ் டெம்பே கூட்டணி மீண்டும் அசத்தலாம். கடந்த 5 போட்டிகளில் மொத்தம் 12 கோல் அடித்த நெதர்லாந்து, எதிரணிகளுக்கு 4 கோல்கள் மட்டும் விட்டுக் கொடுத்தது.

    இதனால், கோஸ்டாரிகாவுக்கு எதிராக அசத்திய மாற்று கோல் கீப்பர் டிம் குருலுக்குப் பதில், வழக்கமான ஜாஸ்பர் சில்லசன் மறுபடியும் களமிறங்குவது உறுதி.

    அர்ஜென்டினா நெதர்லாந்து அணிகள் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் மோதின. இதில், நெதர்லாந்து 4ல் வென்றது. அர்ஜென்டினா ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நெதர்லாந்துடன் இன்று மோதல்: சாதிப்பாரா மெஸ்ஸி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top