நான் ஊடகத் துறை அமைச்சர் என்ற வகையில்
உண்மையில் வெட்கப்படுகிறேன் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே
ஞானசார தேரரிடம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அளுத்கம பிரச்சினையின் போது ஊடகங்கள்
சரியாக செயற்படவில்லையெனவும் சர்வதேசத்தின் மத்தியில் தவறான பிரச்சாரத்தைக்
கொண்டு சென்றதாகவும், அடிப்படைவாதிகளுக்கு சார்பாக மாத்திரமே ஊடகங்கள் சில
செயற்பட்டதாகவும், ஒரு மாதம் காத்திருந்தும் அரசாங்கம் இதற்கு எதிராக எந்த
நடவடிக்கையையும் எடுக்க வில்லையெனவும் ஞானசார தேரர் அமைச்சரிடம்
தெரிவித்தபோதே ஊடகத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேரர்களாகிய உங்களது ஆலோசனைகள் எமக்கு
மிக்க பலமாகும். கொள்கைப் பிரச்சினையால் எங்கு சென்றோம் என்பது குறித்து
இப்போது பேசிப் பிரயோசனம் இல்லை. உங்களது பௌத்த அமைப்பும் எமது அமைச்சும்
தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன்போது பிரச்சினைகள் குறையும். ஊடகத்துறை
சார்ந்த இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் உண்டான பொறுப்பை நான் ஏற்றுக்
கொள்கின்றேன். இவற்றுக்கு மிக விரைவில் தீர்வு காண்பேன் எனவும் அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று முன்தினம் பொதுபல சேனா ஊடக அமைச்சில்
மேற்கொண்ட சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்துள்ளார்.-DC
0 comments:
Post a Comment