• Latest News

    July 08, 2014

    பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன்

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது அரைஇறுதி ஆட்டம் இலங்கை - இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரேசில்– ஜெர்மனி அணியின் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணி கேப்டனும், சிறந்த பின்கள வீரருமான தியாகோ சில்வா இன்றைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட முடியாது. கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கோல் அடித்து இருந்தார். ஏற்கனவே காயம் காரணமாக நெய்மர் விலகி இருந்தார். இந்த இருவரும் ஆடாதது பிரேசில் அணிக்கு பின்னடைவாகும். சில்வா தடையை எதிர்த்து பிரேசில் அப்பீல் செய்கிறது.
    இதற்கிடையே இன்றைய ஆட்டத்துக்கான பிரேசில் அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் செயல்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே துணை கேப்டனாக உள்ளார். கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அற்புதமாக பிரீகிக் அடித்த டேவிட் லுயிஸ் கேப்டன் பொறுப்பு பற்றி கூறும்போது, சவாலை சந்திக்க தயார். அணியில் இருக்கும் வீரர்கள் பணிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் நடந்து கொள்வார்கள் என்பதால் அவர்களை வழிநடத்துவது எளிதானது என்றார்.

    நெய்மர் இடத்தில் வில்லியன் களம் இறக்கப்படலாம். அதே நேரத்தில் பெர்னான்டினோவுக்கும் வாய்ப்பு உள்ளது. தியாகோ சில்வா இடத்தில் டான்டே இடம் பெறுவார்.

    நெய்மர், சில்வா இல்லாததால் வீரர்களை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் ஸ்காலரிக்கு கடும் தலைவலி இருக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top