எம்.வை.அமீர்: உள்ளுராட்சி சபைகளுக்கான ஊழியர்களை நிரந்தர நியமனத்துக்குள் உள்வாங்கும் விடையத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சரான, முதலமைச்சரின் செயலாளரின், பிரதிநிதியின் தலைமைத்துவத்தின் கீழே நடத்தப்பட்ட, நேர்முகப்பரிட்சையில் கொடுக்கப்பட்ட, புள்ளிகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இங்கு முதல்வரோ அல்லது உறுப்பினரோ அல்லது வேறு யாருடைய தலையீடுகளோ இங்கு இடம்பெறவில்லை என்று, இன்று (2014-07-25) இடம்பெற்ற கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வின் போது , கல்முனை மாநகரசபையின் முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கருத்துத்தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வின் போது மாநகரசபையின் உறுப்பினர் ணுயுர். ரகுமான் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட முதல்வர் நிஸாம் காரியப்பர், குறித்த நியமனங்கள் விடையத்தில் யாருக்காவது அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக கருதினால் அவர்கள் மேன்முறையீட்டு செய்வதற்கோ அல்லது நீதிமன்றம் செல்வதற்கோ முடியும் என்றும் தெரிவித்தார். இங்கு அரசியல் தலையீடுகளோ வேறு ஏதும் தலையீடுகளோ இடம்பெறவில்லையென அழுத்தமாக தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் உள்ள மாநகரசபையின் சுகாதார மத்திய நிலையத்தை மிகவும் அழகாக செய்து கொண்டுவருவதாகவும், அதற்க்கு பிரதி முதல்வர் அவர்களது அனுமதியுடன் உறுப்பினர் யுயு.பஸீர் அவர்களை முதல்வரின் பிரதிநிதியாக நியமித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வின் போது வெற்றிடமாக இருந்த பிரதி முதல்வர் பதவிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஆஐஆ.பிர்தௌஸ் அவர்களது கண்ணியுரையும் இடம்பெற்றது அவரது உரையின் போது தனக்கு வழங்கப்பட்டுள்ள அமானிதத்தை சிறந்தமுறையில் கொண்டு செல்லவுள்ளதாகவும் அதற்க்கு சபை ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் யு.அமிர்தலிங்கம் அவர்கள் பிரதிமுதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பிரதி முதல்வருக்கு கடமைகளை பகிர்ந்தளிக்கும் படசத்தில் சபையின் நடவடிக்கைகள் இலகுவாக செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதற்க்கான ஏற்பாடுகளை சபைமுதல்வர் அவர்கள மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய சபை நடவடிக்கையின் போது உறுப்பினர் யுசு. அமீர் அவர்கள் சபையில் உரையாற்றுகையில், நீதி நியாயம் இஸ்லாமிய கிலாபத் ஆட்சி ஜனநாயகம் பற்றி எல்லாம் பேசுவோர் தாங்கள் இவ்வாறானதொரு வகையில் நியமிக்கப்பட்டிருக்கிறோமா? என சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர் யுயு.பஸீர் அவர்களால் கடந்த சபை அமர்வுகளின் போது முன்வைக்கப்பட்ட சாய்ந்தமருது எல்லையில் உள்ள வரவேற்பு வளைவுக்கு வாசகங்கள் பொறிப்பது தொடர்பில் முதல்வர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் அள்ளப்படும் தின்மக்களிவுகளை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்குள் இட்டு அதன் மேல் மண்ணிட்டு நிரப்பிக்கொள்ள முடியுமானால் அதனுடாக பல்வேறுபட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.






0 comments:
Post a Comment