சனல் 4 ஊடகத்தின் மூலம் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாக வவுனியாவில் மக்கள் இன்று (14) ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இன்று வட பகுதிக்கு சென்று மேலும் தகவல்களை திரட்டுவதற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள் திட்ட மிட்டிருந்த நிலையிலேயே இவ் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிறவுண் நிலையத்திற்கு முன்னால் ஒன்று கூடிய மக்கள் ஏ9 வீதி வழியாக வந்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜெயதிலக, தர்மபால செனவிரத்ன, முன்னாள் நகரசபை உறுப்பினர் தேசமான்ய குமாரசாமி மற்றும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.இன்று வட பகுதிக்கு சென்று மேலும் தகவல்களை திரட்டுவதற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள் திட்ட மிட்டிருந்த நிலையிலேயே இவ் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிறவுண் நிலையத்திற்கு முன்னால் ஒன்று கூடிய மக்கள் ஏ9 வீதி வழியாக வந்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்ரோசமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏ9 வீதியை தொடர்ந்து மறிக்க மறிக்க முற்பட்ட போதும் பொலிசார் அதனை தடுத்தனர்.

0 comments:
Post a Comment