இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
இதன்படி 01122784208/ 2784537 மற்றும் 2784422 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் அறிவிக்க முடியும் என புஸ்பகுமார அத தெரணவுக்கு தெரிவித்தார்.
சகல பரீட்சாத்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை கடந்த வாரம் தபாலிடப்பட்டுள்ளதாகவும் தற்போது அவை கிடைக்கப்பெற்றிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இதன்படி 01122784208/ 2784537 மற்றும் 2784422 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் அறிவிக்க முடியும் என புஸ்பகுமார அத தெரணவுக்கு தெரிவித்தார்.
பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெற்றிருக்கும் எனவும் அவற்றை விரைவில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் புஸ்பகுமார கூறினார்.
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment