• Latest News

    July 09, 2014

    இலங்கையில் முஸ்லிம் கலாச்சாரத்திற்கு மரியாதை அளிக்கப்படுகிறது

    இலங்கையில் முஸ்லிம் கலாச்சாரத்திற்கு மரியாதை அளிக்கப்படுவதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் கடும்போக்குவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூன் 15ஆம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 80 பேர் காயமடைந்தனர்.
    இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தினர் பீதியடைய வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்தினர் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    தேசப்பற்றுள்ள முஸ்லிம்களே இலங்கையில் உள்ளதாக அவர் கூறினார். அரசாங்கம் இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக வடிவேல் கிருஸ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் முஸ்லிம் கலாச்சாரத்திற்கு மரியாதை அளிக்கப்படுகிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top