• Latest News

    July 05, 2014

    கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் அரையிறுத்திகுள் நுழைந்தது பிரேசில்

    உலக கிண்ண காற்பந்து தொடரில் கொலம்பியாவை வீழ்த்திய பிரேசில் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    போர்டலெஜாவில் நடந்த காலிறுப் போட்டியில் பிரேசில் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    உலக கிண்ண தொடரை ஏற்று நடத்தி வரும் பிரேசில் அணி துவக்கம் முதல் ஆதி்க்கம் செலுத்தியது. போட்டியின் 7வது நிமிடத்தில நெய்மர் அடித்த 'கார்னர் ஷாட்‌டை' கேப்டன் தியாகோ சில்வா சிறப்பாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.

    இதற்கு கொலம்பிய வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை. முதல் பாதியின் முடிவில், 1-0 என பிரேசில் முன்னிலை பெற்றது.

    பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியிலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணிக்கு கிடைத்த 'ப்ரீ கிக்' வாய்ப்பை அருமையாக பயன்படு்த்திய டேவிட் லுாயிஸ் (68) இரண்டாவது கோல் அடித்தார்.

    கடைசிவரை போராடிய கொலம்பிய அணிக்கு 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். ஆனால் தொடர்ந்து போராடிய கொலம்பிய வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

    இறுதியில், பிரேசில் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இதன்மூலம் பிரேசில் அணி 11வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. எட்டாம் திகதி பெலோ ஹரிசான்டேவில் நடக்கும் முதல் அரையிறுதியில் பிரேசில் அணி, ஜெர்மனியை சந்திக்கிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் அரையிறுத்திகுள் நுழைந்தது பிரேசில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top