• Latest News

    July 05, 2014

    உலக கிண்ண தொடரில் பலம்பொருத்திய பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி.

    ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது காலிறுதியில், பலம்பொருத்திய அணிகளான ஜெர்மனி, பிரான்ஸ் மோதின. இரு அணிகளும் முன்னாள் சாம்பியன் என்பதால், ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக போராடின. 

    ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ–கிக்’ வாய்ப்பில் ஜெர்மனியின் டோனி குரூஸ் பந்தை பிரான்ஸ் ‘கோல் ஏரியாவுக்குள்’ துல்லியமாக அடித்தார். இதனை அப்படியே தலையால் முட்டி, மேட்ஸ் ஹம்மல்ஸ் வளைக்குள் தள்ள, ஜெர்மனி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். 

    இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் பிரான்ஸ் வீரர்கள் திணறினர். நட்சத்திர வீரர் பென்சிமா, வெல்பியுனா மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகின. இவர்களால், ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நுாயரை ஏமாற்றி கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி ஜெர்மனியின் 1–0 என்ற முன்னிலையுடன் முடிந்தது.

    இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிக்க தொடர்ந்து போராடினர். இதனை தடுக்க ஜெர்மனி அணியினர் முரட்டு ஆட்டத்தை கையாண்டனர். இதற்காக இந்த அணியின் கதிரா, ஸ்கிவன்ஸ்டீகர் ‘எல்லோ கார்டு’ எச்சரிக்கை பெற்றனர். 

    தங்களது தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த ஜெர்மனி அணிக்கு ஆன்ட்ரி ஸ்சுரல் 82வது, 88வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். 

    ‘ஸ்டாபேஜ்’ நேரத்தில் பிரான்சின் பென்சிமா மின்னல் வேகத்தில் பந்தை உதைத்தார். அந்நாட்டு ரசிகர்கள் எல்லாம் அதிசயம் நடக்கும் என எதிர்பார்த்தனர். இந்த கடைசி முயற்சியையும் ஜெர்மனி கீப்பர் நுாயர் திறமையாக தடுக்க, பிரான்சின் கனவு தகர்ந்தது. 

    ஜெர்மனி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலக கிண்ண தொடரில் பலம்பொருத்திய பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஜெர்மனி. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top