• Latest News

    July 09, 2014

    சூரா சபையை தடை செய்யுமாறு பொதுபலசேனா புதிய கோரிக்கை

    பொதுபலசேனா தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

    முஸ்லிம்களின் சூரா சபையை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

    சூரா சபை முஸ்லிம் நாடுகளில் நிர்வாக நடவடிக்கைகளில் அங்கமாக உள்ளன. அந்த சபையை முஸ்லிம் நாடுகள் நாடாளுமன்றத்தை போன்று பார்க்கின்றன. எனினும் இலங்கையில் அது நடைமுறையில் இல்லை.
    இதேவேளை எவ்வித ஆதாரங்களும் இன்றி அளுத்கமை சம்பவத்துக்கு பொதுபலசேனாவை சூரா சபை குற்றம் சுமத்தியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

    எனினும் இலங்கையில் சூரா சபையானது, அனைத்து முஸ்லிம் அமைப்புக்களையும் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம். எனவே அதனை கலைக்ககோர முடியாது.

    அதேபோல, தாம் ஒருபோதும் பொதுலசேனாவை தடைசெய்யக் கோரவில்லை என்று சூரா சபையின் தலைவர் சுஹைர் குறிப்பிட்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சூரா சபையை தடை செய்யுமாறு பொதுபலசேனா புதிய கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top