• Latest News

    July 08, 2014

    நான் பாராளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்கிறேன்: பாலித தெவரப்பெரும

    அலுத்கம மற்றும் பேருவளை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக  போலீஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்

    அவர் பதவி விலகாத காரணத்தினால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

    அண்மையில் பேருவளை அலுத்கம ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது சம்பவத்தில் காயமடைந்தமுஸ்லிம்களை பாலித தெவரப்பெரும காப்பாற்றியிருந்தார். காயமடைந்தவர்களை  வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

    வன்முறைச் சம்பவங்களுக்கான பொறுப்பினை ஏற்று போலீஸ் மா அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அவர் வலிறுயுத்தியிருந்தார். பதவியை ராஜினாமா செய்யத் தவறினால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

    இதன்படி நாளைய தினம் பாராளுமன்றில் வைத்து பாலித தெவரப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்க உள்ளார். எனினும், இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான் பாராளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்கிறேன்: பாலித தெவரப்பெரும Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top