கல்முனை மாநகர சபையின் பிரதி முதலராக எம்.ஐ.எம்.பிர்தௌஸ், முதல்வர்
சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்
செய்து பதவியேற்றுள்ளார். அத்தோடு தனது கடமைகளையும் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளராகவும் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார். அத்தோடு 1996-1999 வரையான காலப்பகுதியில் கல்முனை பிரதேச சபை உறுப்பினராக செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment